பத்தரமுல்லையில் அழகுக்கலை நிபுணருக்கு மாலத்தீவு நாட்டவரால் தொல்லை

maldivian-molested-a-beautician-in-battaramulla

பத்தரமுல்ல, பெலவத்த பிரதேசத்தில் அமைந்துள்ள ஒரு தங்குமிடத்தில் (வில்லா) இருபத்தெட்டு வயதுடைய ஒரு அழகுக்கலை நிபுணர் மற்றும் சிகிச்சையாளரை பாலியல் துஷ்பிரயோகம் செய்த சம்பவம் தொடர்பாக ஐம்பத்தொரு வயதுடைய மாலத்தீவு பிரஜை ஒருவர் தலங்கம பொலிஸாரால் அண்மையில் கைது செய்யப்பட்டார். கடந்த 04ஆம் திகதி இந்த சந்தேகநபர் பொலிஸ் காவலில் எடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.




பொலிஸ் விசாரணைகளின்படி, கைது செய்யப்பட்ட சந்தேகநபரான வெளிநாட்டவர் மாலத்தீவில் தச்சராக பணிபுரிபவர். அவர் தங்கியிருந்த பெலவத்த பிரதேசத்தில் உள்ள வில்லாவுக்கு சம்பந்தப்பட்ட பெண்ணை மசாஜ் சேவை பெறுவதற்காக அழைத்துள்ளார், அவர் மசாஜ் செய்து கொண்டிருந்தபோது சந்தேகநபர் அவரை பலவந்தமாக பாலியல் பலாத்காரம் செய்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

இந்த குற்றம் தொடர்பாக தலங்கம பொலிஸ் நிலையத்தின் சிறுவர் மற்றும் பெண்கள் பணியக அதிகாரிகள் குழுவொன்று தற்போது விசேட விசாரணையை ஆரம்பித்துள்ளது.

Post a Comment

Previous Post Next Post