என்னைக் சிறையில் அடைப்பது எளிதாக இருக்காது - நாமல்

it-will-not-be-easy-to-put-me-in-jail---namal

இலங்கை பொதுஜன பெரமுன பாராளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ அவர்கள் குறிப்பிடுகையில், தன்னை சிறையில் அடைப்பது இலகுவான காரியமல்ல என்றும், ஒருவேளை அப்படி நடந்தாலும் கட்சியின் எதிர்கால வேலைத்திட்டத்தை தொடர்ச்சியாக முன்னெடுத்துச் செல்ல தேவையான அனைத்து நடவடிக்கைகளும் ஏற்கனவே எடுக்கப்பட்டுள்ளன என்றும் தெரிவித்தார்.




கட்சித் தலைமையகத்தில் நடைபெற்ற விசேட பயிற்சி நிகழ்ச்சி ஒன்றில் கலந்துகொண்டு பாராளுமன்ற உறுப்பினர் தெரிவிக்கையில், எந்தவொரு சவாலையும் வெற்றிகரமாக எதிர்கொள்ளக்கூடிய வகையில் கிராம மட்டம் முதல் மாவட்ட மட்டம் வரை கட்சி அமைப்பு வலையமைப்பு ஏற்கனவே பலப்படுத்தப்பட்டுள்ளது என்றார்.

தன்னை சிறையில் அடைத்தாலும் கட்சியின் செயற்பாடுகள் தடைபடாது என்பதை சுட்டிக்காட்டிய அவர், கிளைச் சங்கங்கள் மற்றும் அதிகார சபைகளை அமைத்தல், கோட்ட மட்ட நடவடிக்கைகளை வழிநடத்துதல் அத்துடன் தொகுதி மற்றும் மாவட்ட கூட்டங்களை எவ்வாறு நடத்துவது என்பது குறித்து தெளிவான திட்டங்கள் தயாரிக்கப்பட்டுள்ளன என்பதை மேலும் வலியுறுத்தினார். அங்கு மேலும் கருத்து தெரிவித்த அவர்,




“என்னை சிறையில் அடைப்பது இலகுவானதல்ல. அடைத்தாலும் பிரச்சனை இல்லை. கிளைச் சங்கங்கள் மற்றும் அதிகார சபைகளை அமைக்கும் முறை குறித்து நாங்கள் தெளிவாக ஒரு திட்டத்தை வகுத்துள்ளோம். கிராம மட்டத்தில் கோட்டப் பணிகளை எவ்வாறு செய்ய வேண்டும், தொகுதி அதிகார சபைகளை எவ்வாறு அழைக்க வேண்டும், மாவட்டக் கூட்டங்களை எவ்வாறு நடத்த வேண்டும் என்று ஒரு வேலைத்திட்டத்தை வகுத்துள்ளோம்.”

Post a Comment

Previous Post Next Post