பல துறைகளில் அரச ஊழியர்களின் ஓய்வு பெறும் வயது அதிகரிக்கப்பட்டுள்ளது

retirement-age-of-government-employees-in-several-fields-has-gone-up

அரசாங்க ஊழியர்களின் ஓய்வுபெறும் வயதை திருத்துவது தொடர்பாக பல்வேறு தரப்பினரிடமிருந்து அரசாங்கத்திற்கு கோரிக்கைகள் கிடைத்து வருவதாக சுகாதார மற்றும் வெகுசன ஊடகத்துறை அமைச்சர் வைத்தியர் நளிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்துள்ளார். சம்பந்தப்பட்ட துறைகளில் இருந்து முன்வைக்கப்பட்டுள்ள இந்தக் கோரிக்கைகள் குறித்து அரசாங்கத்தின் கவனம் செலுத்தப்பட்டுள்ளதாகவும், அது குறித்து தற்போது பரிசீலிக்கப்பட்டு வருவதாகவும் அமைச்சர் குறிப்பிட்டார்.




மீரிகம வைத்தியசாலையில் புதிதாக நிறுவப்பட்ட சிறுநீரகக் கல் அகற்றும் சிகிச்சை பிரிவை உத்தியோகபூர்வமாக திறந்து வைக்கும் நிகழ்வில் நேற்று (12) கலந்துகொண்ட பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கையிலேயே அமைச்சர் இதனை வெளிப்படுத்தினார். பல்வேறு தொழில் வல்லுநர்களால் முன்வைக்கப்பட்ட இந்தக் கோரிக்கைகளை நன்கு ஆராய்ந்து எதிர்காலத்தில் தேவையான நடவடிக்கைகளை அரசாங்கம் எடுக்கும் என்றும் அவர் மேலும் தெரிவித்தார்.

அங்கு கருத்து தெரிவித்த சுகாதார மற்றும் வெகுசன ஊடகத்துறை அமைச்சர் வைத்தியர் நளிந்த ஜயதிஸ்ஸ,




“ஏற்கனவே பல்வேறு தொழில் வல்லுநர்களிடமிருந்து கோரிக்கைகள் வந்துள்ளன. மேன்முறையீட்டு நீதிமன்றம், உச்ச நீதிமன்றம், உயர் நீதிமன்றம் மட்டுமல்லாமல், சுகாதார சேவையில் உள்ள சில தொழில் வல்லுநர்களிடமிருந்தும் கோரிக்கைகள் வந்துள்ளன. சிறைச்சாலைகள் திணைக்களத்திடமிருந்தும் கோரிக்கைகள் உள்ளன. மேலும் சில தொழில் வல்லுநர்கள் தங்கள் ஓய்வுபெறும் வயதை அதிகரிக்கவும், இன்னும் சிறிது காலம் வேலை செய்யவும் முடியும் என்ற கருத்து முன்வைக்கப்பட்டுள்ளது. சிலர் இதற்கு எதிர்ப்பு தெரிவிக்கலாம். ஆனால் அரசாங்கம் என்ற வகையில் அந்தக் கோரிக்கைகள் பரிசீலிக்கப்பட்டு வருகின்றன”

Post a Comment

Previous Post Next Post