தேசிய டெங்கு ஒழிப்பு நிகழ்ச்சித்திட்டத்திற்கு இணையாக பத்தரமுல்லை, பெலவத்த பிரதேசத்தில் மேற்கொள்ளப்பட்ட விசேட வளாகப் பரிசோதனையின் போது, அசுத்தமான நிலையில் காணப்பட்ட வீட்டிலிருந்து உயிருள்ள நுளம்பு குடம்பிகளுடன் உயிருள்ள துப்பாக்கி ஒன்றையும் கண்டறிய பரிசோதனைக் குழுக்கள் வெற்றி பெற்றுள்ளன.
பத்தரமுல்லை சுகாதார மருத்துவ அதிகாரி அலுவலகத்தின் பொது சுகாதார பரிசோதகர்கள் இலங்கை பொலிஸ், இராணுவம், விமானப்படை மற்றும் செஞ்சிலுவைச் சங்கத்தின் ஒத்துழைப்புடன் இந்த கூட்டு நடவடிக்கையை மேற்கொண்டுள்ளனர்.
அதிக எண்ணிக்கையிலான நாய்களை வளர்த்து, மிகவும் அசுத்தமான முறையில் பராமரிக்கப்பட்டு வந்த குறித்த வீட்டை சோதனையிட்ட போது இந்த துப்பாக்கி கண்டுபிடிக்கப்பட்டதுடன், பின்னர் பொலிஸார் அதனை பொறுப்பேற்று வீட்டின் உரிமையாளரான பெண்ணை கைது செய்துள்ளனர்.
இது தவிர, உயிருள்ள நுளம்பு குடம்பிகள் இருந்த மற்றொரு வளாகத்தை பரிசோதித்த போது, அதன் உரிமையாளர் அதிகாரிகளின் கடமைக்கு இடையூறு விளைவித்ததால் இரு தரப்பினருக்கும் இடையே சூடான வாக்குவாதம் ஏற்பட்டது.
நுளம்பு குடம்பிகளுடன் வளாகங்களை பராமரித்து வந்த 13 பேருக்கு எதிராக கடுவெல நீதவான் நீதிமன்றத்தில் வழக்குத் தொடர நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதுடன், டெங்கு நுளம்புகள் பெருகும் இடங்களை உடனடியாக அழித்து ஒழிப்பு அதிகாரிகளுக்கு தேவையான ஒத்துழைப்பை வழங்குமாறு சுகாதாரத் துறை மக்களிடம் மேலும் கோரியுள்ளது.