நவம்பர் மாதம் 01 ஆம் திகதி முதல் TIN இலக்கத்தை அனைவரும் பெற்றுக்கொள்ளும் வகையில் ஏற்பாடுகள் செய்யப்படுகின்றன

arrangements-will-be-made-to-make-tin-numbers-available-to-everyone-from-november-1st

உள்நாட்டு இறைவரித் திணைக்களம் 2026 நவம்பர் 01 ஆம் திகதி முதல் சில குறிப்பிட்ட நடவடிக்கைகளுக்கு செல்லுபடியான வரி செலுத்துவோர் அடையாள இலக்கத்தை (TIN) சமர்ப்பிப்பது கட்டாயமாக்கப்பட்டுள்ளதாக அறிவித்துள்ளது. பொதுமக்கள் குறிப்பாக கவனம் செலுத்த வேண்டிய எட்டு முக்கிய சேவைகளுக்கு இந்த ஒழுங்குமுறை பொருந்தும்.




இதன்படி, வங்கியில் அல்லது நிதி நிறுவனத்தில் புதிய கணக்கொன்றைத் திறக்கும்போதும், கட்டிடத் திட்டங்களுக்கான அனுமதியைப் பெறும்போதும், மோட்டார் வாகனத்தைப் பதிவு செய்யும்போதும், மோட்டார் வாகன வருமான அனுமதிப்பத்திரத்தைப் புதுப்பிக்கும்போதும் TIN இலக்கத்தைச் சமர்ப்பிப்பது கட்டாயமாகும்.

அத்துடன், காணி அல்லது காணி உரிமைகளைப் பதிவு செய்யும்போதும், ஒரு வர்த்தகத்தைப் பதிவு செய்யும்போதும், இலங்கையில் பதிவு செய்யப்பட்ட நிறுவனத்தின் பங்குகளை மாற்றும்போதும், கடன் அட்டைகளைப் (கிரெடிட் கார்ட்) பெறும்போதும் இந்த TIN இலக்கத்தைச் சமர்ப்பிப்பது கட்டாயமாகும் என உள்நாட்டு இறைவரித் திணைக்களத்தால் வெளியிடப்பட்ட அறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது. சம்பந்தப்பட்ட சேவைகளை வழங்குவதற்கு முன்னர் சமர்ப்பிக்கப்படும் TIN இலக்கம் செல்லுபடியானதா என்பதை சம்பந்தப்பட்ட பொறுப்புள்ள அதிகாரிகள் உறுதிப்படுத்த வேண்டும்.




இதுவரை வரி செலுத்துவோர் அடையாள இலக்கத்தைப் பெறாதவர்கள், உடனடியாக அந்த இலக்கத்தைப் பெற்றுக்கொள்ளுமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள். அதற்காக உள்நாட்டு இறைவரித் திணைக்களத்தின் e-சேவை முறைமையான https://eservices.ird.gov.lk/Registration/TINRegistration/ShowRequestHeader ஊடாக இணையம் வழியாக விண்ணப்பிக்கலாம்.

Post a Comment

Previous Post Next Post