வட கடற்கரையில் யாழ்ப்பாணம், மாதாகல் குசுமந்துறை பிரதேசத்தில் இன்று (27) காலை மேற்கொள்ளப்பட்ட விசேட கடற்படை நடவடிக்கையின் போது கைப்பற்றப்பட்ட போதைப்பொருள் தொகையின் மொத்த எடை 81 கிலோகிராம் என இலங்கை கடற்படை உறுதிப்படுத்துகிறது.
கைப்பற்றப்பட்ட குறித்த போதைப்பொருள் தொடர்பில் யாழ்ப்பாணம் பொலிஸ் போதைப்பொருள் ஒழிப்புப் பிரிவின் நிபுணர் பங்களிப்புடன் பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்ட போது, அத்தொகைக்குள் 45.5 கிலோகிராம் ஐஸ் போதைப்பொருளும் 35.7 கிலோகிராம் ஹெரோயின் போதைப்பொருளும் அடங்கியுள்ளன என உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.
இந்த போதைப்பொருள் கடத்தல் தொடர்பில் ஒரு சந்தேகநபரையும் அத்துடன் குறித்த தொகையை கடத்துவதற்கு பயன்படுத்தப்பட்டதாக சந்தேகிக்கப்படும் படகு ஒன்றையும் நடவடிக்கைகளின் போது கைப்பற்ற பாதுகாப்புப் படையினர் வெற்றி பெற்றனர்.
சம்பவம் தொடர்பில் சம்பந்தப்பட்ட பிரிவுகளால் மேலதிக விசாரணைகள் தொடர்ந்து முன்னெடுக்கப்பட்டு வரும் நிலையில், இது தொடர்பான மேலதிக தகவல்களை எதிர்காலத்தில் வெளியிட கடற்படை எதிர்பார்க்கிறது.