தம்புள்ளையில் உள்ள “திய ஜனனி” 5 மெகாவாட் மிதக்கும் சூரிய மின் உற்பத்தி நிலையம் தேசிய மின் கட்டமைப்புக்கு

dambullas-diya-janani-5-mw-floating-solar-power-plant-to-be-connected-to-the-national-grid

தம்புள்ள, இபன்கட்டுவ குளத்தில் கட்டப்பட்ட 05 மெகாவாட் திறன் கொண்ட “திய ஜனனி” மிதக்கும் சூரிய மின் உற்பத்தி நிலையம் தேசிய மின் கட்டமைப்புடன் இணைக்கும் நிகழ்வு ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்கவின் தலைமையில் நடைபெற்றது. அரசாங்கத்தின் புதுப்பிக்கத்தக்க எரிசக்தி தேசிய நிகழ்ச்சித்திட்டத்திற்கு இணையாக ஏற்பாடு செய்யப்பட்டிருந்த இந்த நிகழ்வில், ஜனாதிபதி நினைவுப் பலகையைத் திறந்து வைத்து மின் நிலையத்தை தேசிய அமைப்புடன் இணைத்ததுடன், பின்னர் அதன் கட்டுப்பாட்டு அறைக்குச் சென்று செயல்பாட்டையும் அவதானித்தார்.

10.5 ஏக்கர் பரப்பளவுள்ள நீர்மட்டத்தில் பரவியுள்ள இந்த மிதக்கும் சூரிய சக்தி திட்டம் மூலம் வருடத்திற்கு சுமார் 7,500 வீடுகளுக்குத் தேவையான மின்சாரத்தை வழங்க எதிர்பார்க்கப்படுகிறது. இதன் மூலம் சுற்றுச்சூழலுக்கு ஆண்டுதோறும் வெளியிடப்படும் கார்பன் டை ஆக்சைடு அளவு சுமார் 6,400 மெட்ரிக் தொன்களால் குறைக்கப்படும். மேலும், வெப்ப மின் உற்பத்திக்கு செலவிடப்படும் 2.5 மில்லியன் லீட்டர் டீசல் வருடத்திற்கு சேமிக்கப்படுவதுடன், இதன் மூலம் நாட்டிற்கு இழக்கப்படும் 03 மில்லியன் அமெரிக்க டாலர் வெளிநாட்டு நாணயத்தை பாதுகாக்கவும் வழிவகை செய்யப்படுகிறது.

திய ஜனனி தனியார் நிறுவனத்தால் உருவாக்கப்பட்ட இந்த திட்டத்திற்காக உள்நாட்டு பொறியியலாளர்கள் மற்றும் தொழில்நுட்ப வல்லுநர்களின் முழு பங்களிப்பு பெறப்பட்டிருப்பது ஒரு குறிப்பிடத்தக்க அம்சமாகும். இது தவிர, மின் நிலையத்தின் கட்டுமானப் பணிகள் நடைபெற்ற காலத்தில் சுமார் 150 உள்ளூர்வாசிகளுக்கு நேரடியாக வேலை வாய்ப்புகளை வழங்கவும் நடவடிக்கை எடுக்கப்பட்டிருந்தது.

மின் உற்பத்தி நிலையத்தைத் திறப்பதோடு இணையாக, பிரதேச மக்களின் உட்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்துவதற்காக பல சமூக நலத்திட்டங்களும் இங்கு செயல்படுத்தப்பட்டன. அதன்படி, ஸ்ரீ விவேகாராம விகாரையின் தர்ம மண்டப கட்டுமானத்திற்காக எட்டு இலட்சம் ரூபாயும் ஒரு ஜெனரேட்டர் இயந்திரமும் வழங்கப்பட்டது. பிரதேச மீனவ சமூகத்தின் சேற்றுக்குளங்களை அமைக்கவும் மீன்பிடி உபகரணங்களைப் பெறவும் 20 இலட்சம் ரூபா நிதி உதவி வழங்கப்பட்டது. மேலும், 'சுத்தமான இலங்கை' திட்டத்தின் கீழ் ஒரு பசுமைப் பூங்காவை அமைக்க 10 இலட்சம் ரூபாயும், ஆனகட்டாவ ஆரம்பப் பாடசாலையின் அனைத்து மாணவர்களுக்கும் ஒரு வருடத்திற்குத் தேவையான பாடசாலைப் பொருட்களுக்காக எட்டு இலட்சம் ரூபாயும், வீர மோகன் ஜயமஹ வித்தியாலயத்தின் அபிவிருத்தி மற்றும் ஒரு நீர் திட்டத்திற்காக நான்கு இலட்சம் ரூபா நிதி நன்கொடையும் வழங்கப்பட்டது.

இந்த திட்டத்தை தேசிய அமைப்புடன் இணைக்கும் நிகழ்விற்காக துறைமுகங்கள், சிவில் விமானப் போக்குவரத்து மற்றும் எரிசக்தி அமைச்சர் அநுர கருணாதிலக்க, புத்தசாசன, மத மற்றும் கலாச்சார அலுவல்கள் பிரதி அமைச்சர் கமகெதர திசாநாயக்க, பாராளுமன்ற உறுப்பினர் குமார ஜயக்கொடி ஆகியோர் உட்பட பிரதேச மக்கள் பிரதிநிதிகள் கலந்துகொண்டனர். இது தவிர, எரிசக்தி அமைச்சின் செயலாளர், ஜனாதிபதியின் சிரேஷ்ட மேலதிக செயலாளர் ரசல் அப்போன்சு, நிலைபேறான எரிசக்தி அதிகாரசபை, மின்சார சபையின் வாரிசு நிறுவனங்களின் தலைவர்கள் உள்ளிட்ட அரச அதிகாரிகள், அத்துடன் WindForce PLC நிறுவனத்தின் முகாமைத்துவப் பணிப்பாளர் மஞ்சுல பெரேரா உட்பட பிரதிநிதிகள் குழுவும் இந்த நிகழ்வில் கலந்துகொண்டனர்.

Post a Comment

Previous Post Next Post