கிளிநொச்சி, உத்திரபுரம், சிவநகர் பிரதேசத்தில் தாத்தாவினால் இயக்கப்பட்டுக்கொண்டிருந்த கார் ஒன்றின் கீழ் சிக்கி ஒன்றரை வயது சிறுமி ஒருவர் சம்பவ இடத்திலேயே துரதிர்ஷ்டவசமாக உயிரிழந்த சம்பவம் ஒன்று நேற்று முன்தினம் (5) பதிவாகியுள்ளது.
இவ்வாறு விபத்தில் உயிரிழந்தவர் அதே பிரதேசத்தைச் சேர்ந்த ரூபன் அனாமிகா என்ற சிறுமி ஆவார். தாத்தா காரை இயக்கி முன்னோக்கிச் செல்ல முயன்றபோது, வீட்டிற்குள் இருந்த இந்தச் சிறுமி காரை நோக்கி ஓடி வந்துள்ளார், அப்போது காரின் கீழ் சிக்கியதால் இந்த துயர விபத்து நிகழ்ந்துள்ளது.
கிளிநொச்சி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட ஊருத்திரபுரம், சிவநகர் பிரதேசத்தில் சனிக்கிழமை காலை 11 மணியளவில் இடம்பெற்ற இந்தச் சம்பவத்தில் உயிரிழந்த சிறுமியின் சடலம் தற்போது கிளிநொச்சி மாவட்ட பொது வைத்தியசாலையில் பிரேத பரிசோதனைக்காக வைக்கப்பட்டுள்ளது. இந்தச் சம்பவம் தொடர்பில் கிளிநொச்சி பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.