சரணாவின் மனைவியிடமிருந்து இலஞ்சம் பெற்றுக்கொண்டு, நீதிபதியிடம் இலகுவான தண்டனை கேட்டுத் தருவதாகக் கூறி.

he-took-a-bribe-from-saranas-wife-saying-that-he-would-ask-the-judge-for-a-lenient-sentence

அபிவிருத்தி லொத்தர் சபையின் தலைவராக செயற்பட்டபோது வாகனங்களை முறைகேடாகப் பயன்படுத்தியதாகக் கூறப்படும் 18 குற்றச்சாட்டுகளில் குற்றவாளியாகக் காணப்பட்ட முன்னாள் பிரதி அமைச்சர் சரண குணவர்தனவுக்கு எதிராக நிலுவையிலுள்ள மற்றுமொரு இலஞ்ச வழக்கில் இலகுவான தண்டனை பெற்றுத் தருவதாகக் கூறி, அவரது மனைவியிடமிருந்து ஏழரை இலட்சம் ரூபாவை இலஞ்சமாகப் பெற்றதாகக் குற்றம் சாட்டப்பட்ட உயர் நீதிமன்ற நீதிபதி உதவியாளர் ஒருவரை எதிர்வரும் செப்டம்பர் 22ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு கொழும்பு பிரதான நீதவான் அசங்க போதரகம உத்தரவிட்டார்.




இவ்வாறு விளக்கமறியலில் வைக்கப்பட்டவர் ஜி.ஏ. சரித் குமார என்ற சந்தேகநபர் ஆவார். கொழும்பு உயர் நீதிமன்ற நீதிபதி ஒருவரால் இலஞ்சம் அல்லது ஊழல் குற்றச்சாட்டுகள் விசாரணை ஆணைக்குழுவிடம் செய்யப்பட்ட முறைப்பாட்டின் அடிப்படையில் விசாரணைகள் நடத்தப்பட்டு கைது செய்யப்பட்ட குறித்த சந்தேகநபர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட பின்னரே இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

இந்த இலஞ்ச சம்பவத்துடன் தொடர்புடையதாக சந்தேகிக்கப்படும் அத்தனகல்ல நீதிமன்ற அதிகாரி ஒருவரைப் பற்றியும், கொழும்பு உயர் நீதிமன்றத்தில் பணிபுரியும் புத்தகக் கட்டுநர் ஒருவரைப் பற்றியும் மேலதிக விசாரணைகள் நடத்தப்படும் என இலஞ்ச ஆணைக்குழு நீதிமன்றத்தில் தெரிவித்தது. சமர்ப்பிக்கப்பட்ட அனைத்து விடயங்களையும் கருத்தில் கொண்ட பின்னர், பிரதான நீதவான் குறித்த சந்தேகநபரை விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவிட்டார்.

Post a Comment

Previous Post Next Post