ஏரோஃப்ளோட் மாஸ்கோ மற்றும் கொழும்பு இடையே நேரடி விமான சேவைகளை தொடங்குகிறது

aeroflot-launches-direct-flights-between-moscow-and-colombo

வரவிருக்கும் குளிர்காலத்திற்காக மொஸ்கோ மற்றும் கொழும்பு இடையே நேரடி விமான சேவைகளை மீண்டும் ஆரம்பிக்க ரஷ்யாவின் தேசிய விமான சேவையான ஏரோஃப்ளோட் நிறுவனம் தீர்மானித்துள்ளது. வரும் ஒக்டோபர் 03ஆம் திகதி முதல் அமுலுக்கு வரும் இந்த திட்டத்தின் கீழ் ஆரம்ப கட்டத்தில் வாரத்திற்கு இரண்டு விமான சேவைகள் இயக்கப்படும்.

எதிர்காலத்தில் இந்த விமான சேவைகளின் எண்ணிக்கையை மேலும் அதிகரிக்க எதிர்பார்ப்பதாக இலங்கைக்கான ரஷ்ய தூதுவர் லெவன் ஜகரியன் தெரிவித்துள்ளார்.




இந்த விமான சேவைகள் மீண்டும் ஆரம்பிக்கப்படுவதன் காரணமாக இலங்கைக்கு வர எதிர்பார்த்துள்ள ரஷ்ய சுற்றுலாப் பயணிகளுக்கும் அத்துடன் நாட்டின் சுற்றுலாத் துறைக்கும் பெரும் வசதி கிடைக்கும். அதிக ரஷ்ய சுற்றுலாப் பயணிகளை இலங்கைக்கு ஈர்க்கும் நோக்கில் தேவையான விளம்பர நடவடிக்கைகளை மேற்கொள்ள நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் தூதுவர் மேலும் தெரிவித்துள்ளார்.

சுற்றுலாப் பயணிகளின் வருகையில் ஏற்பட்ட குறைவை அடிப்படையாகக் கொண்டு கடந்த மே 17ஆம் திகதி முதல் இந்த விமான சேவைகள் தற்காலிகமாக இடைநிறுத்தப்பட்டிருந்தன. பொதுவாக கோடை காலத்தில் ரஷ்யாவிலிருந்து நாட்டிற்கு வரும் சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கையில் சற்று குறைவு காணப்பட்டாலும், இலங்கை சுற்றுலாத் துறையின் முக்கிய சந்தைகளில் ஒன்றாக ரஷ்யா முக்கிய பங்கை வகிக்கிறது. எவ்வாறாயினும், இந்த ஆண்டு கடந்த காலப்பகுதியில் ரஷ்ய சுற்றுலாப் பயணிகளின் வருகை ஒப்பீட்டளவில் மெதுவான மட்டத்தில் இருந்தது.

aeroflot-launches-direct-flights-between-moscow-and-colombo

aeroflot-launches-direct-flights-between-moscow-and-colombo

Post a Comment

Previous Post Next Post