
தொடர்ச்சியான கடமை அழுத்தத்தால் ஏற்பட்ட மனக் குழப்பம் காரணமாக மேலும் சேவை செய்ய முடியாது என்று கூறி தற்காலிகமாக பணியிடத்தை விட்டு வெளியேறிய தெஹிவளை பொலிஸ் போக்குவரத்துப் பிரிவின் பொறுப்பதிகாரி, பொலிஸ் பரிசோதகர் பிரணீத் உதயங்கவின் சேவையை இடைநிறுத்த கல்கிசை சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் அலுவலகம் நடவடிக்கை எடுத்துள்ளது.
சம்பந்தப்பட்ட அதிகாரி இவ்வாறு திடீரென கடமை இடத்திலிருந்து வெளியேறியது குறித்து தெஹிவளை பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி கடிதம் மூலம் அறிவித்துள்ளார். அதற்கமைய செயற்பட்ட கல்கிசை பிரிவுக்குப் பொறுப்பான சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர், குறித்த சம்பவம் தொடர்பில் உடனடியாக விசாரணைகளை நடத்துமாறு கல்கிசை பிரிவின் குற்றப் புலனாய்வுப் பணியகத்திற்கு உத்தரவிட்டுள்ளார்.