மகிந்த கஹந்தகம 26ஆம் திகதி வரை விளக்கமறியலில்

mahinda-kahandagama-remanded-until-the-26th

ஐஸ் போதைப்பொருள் வைத்திருந்த குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டு, தடுப்புக்காவல் உத்தரவின் பேரில் விசாரிக்கப்பட்டு வந்த இலங்கை பொதுஜன பெரமுனவை பிரதிநிதித்துவப்படுத்திய கொழும்பு மாநகர சபையின் முன்னாள் மாநகர சபை உறுப்பினர் மஹிந்த கஹந்தகம விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.




அவர் இன்று (12) நுகேகொட நீதவான் நீதிமன்றில் ஆஜர்படுத்தப்பட்டதன் பின்னர் இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளதுடன், அதன்படி எதிர்வரும் ஒக்டோபர் மாதம் 26ஆம் திகதி வரை அவர் விளக்கமறியலில் வைக்கப்படுவார்.

மத்திய குற்றப் புலனாய்வுப் பிரிவினரால் கடந்த 06ஆம் திகதி முன்னாள் மாநகர சபை உறுப்பினர் ஐஸ் போதைப்பொருளுடன் கைது செய்யப்பட்டார். அதன்பின்னர், நீதிமன்றில் பெறப்பட்ட சட்டபூர்வ அனுமதியின் பேரில் இன்று வரை அவர் தடுத்து வைக்கப்பட்டு மேலதிக விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டன.




தடுப்புக்காவல் காலம் முடிவடைந்த பின்னர், சந்தேகநபரான கஹந்தகம இன்று மீண்டும் நீதிமன்றில் ஆஜர்படுத்தப்பட்டதை அடுத்து, எதிர்வரும் 26ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.

Post a Comment

Previous Post Next Post