பசில் ராஜபக்ஷவுக்கு சர்வதேச சிவப்பு பிடியாணை

international-red-warrant-issued-for-basil-rajapaksa

சுற்றுலா ஊக்குவிப்பு பணியகத்தின் நிதியை தவறாகப் பயன்படுத்தியதாகக் கூறப்படும் குற்றச்சாட்டுகள் தொடர்பாக, முன்னாள் பொருளாதார அபிவிருத்தி அமைச்சர் பசில் ராஜபக்ஷவை கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்துமாறு கோட்டை நீதவான் பசன் அமரசேன இன்று (14) குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தின் சட்டவிரோத சொத்துக்கள் விசாரணைப் பிரிவுக்கு உத்தரவிட்டார்.




மேலும், சந்தேகநபரான முன்னாள் அமைச்சர் தொடர்பில் சர்வதேச பொலிஸ் ஊடாக சிவப்பு அறிவித்தல் ஒன்றை வெளியிட தேவையான நடவடிக்கைகளை எடுக்குமாறு நீதவான் சட்ட அமுலாக்க அதிகாரிகளுக்கு அறிவுறுத்தியுள்ளார். இந்த பிடியாணை உத்தரவு, சம்பவம் தொடர்பான குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தால் சமர்ப்பிக்கப்பட்ட விரிவான உண்மைகளை பரிசீலித்த பின்னரே பிறப்பிக்கப்பட்டது.

குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தின் சட்டவிரோத சொத்துக்கள் விசாரணைப் பிரிவு நீதிமன்றத்தில் வெளிப்படுத்திய தகவல்களின்படி, 2014 ஆம் ஆண்டில் சுற்றுலா ஊக்குவிப்பு பணியகத்திற்கு ஒதுக்கப்பட்ட 7.8 மில்லியன் ரூபாய் நிதி உரிய ஊக்குவிப்பு நடவடிக்கைகளுக்கு பயன்படுத்தப்படவில்லை. அந்த நிதியைப் பயன்படுத்தி ஊவா மாகாண சபைத் தேர்தல் பிரச்சாரத்திற்காக 12,000 டி-ஷர்ட்களைப் பெற்றதன் மூலம் அரசுக்கு பெரும் நிதி இழப்பு ஏற்பட்டுள்ளதாக நீதிமன்றத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Post a Comment

Previous Post Next Post