தெற்கு அதிவேக நெடுஞ்சாலையின் 29வது மைல்கல் அருகே ஒரு கார் சாலையில் கவிழ்ந்ததால் விபத்து ஏற்பட்டுள்ளது. இருப்பினும், இந்த சம்பவத்தில் யாருக்கும் பாரிய காயங்கள் ஏற்படவில்லை.
தகவலின்படி, இந்த விபத்து ஒரு வேனின் பின்புறத்தில் சம்பந்தப்பட்ட கார் மோதியதால் ஏற்பட்டுள்ளது. அந்த மோதலுக்குப் பிறகு, கார் அதிவேக நெடுஞ்சாலையில் இவ்வாறு கவிழ்ந்துள்ளது.
சம்பவம் நடந்த இடத்திற்கு வந்த தெற்கு அதிவேக நெடுஞ்சாலையின் அதிகாரிகள், சாலையில் கவிழ்ந்திருந்த காரை அகற்ற தேவையான நடவடிக்கைகளை எடுத்துள்ளனர்.