உள்ளாடையில் மறைத்து போதைப்பொருள் விற்ற பாத்திமாவுக்கு ஆயுள் சிறை

pathima-who-sold-drugs-hidden-behind-a-window-sentenced-to-life-in-prison

தான் அணிந்திருந்த உள்ளாடைக்குள் ஹெரோயின் போதைப்பொருளை சூட்சுமமாக மறைத்து கடத்திய குற்றச்சாட்டில் குற்றவாளியாக அறிவிக்கப்பட்ட ஒரு பெண்ணுக்கு கொழும்பு மேல் நீதிமன்றம் ஆயுள் தண்டனை விதித்துள்ளது.




இவ்வாறு தண்டனைக்கு உட்படுத்தப்பட்டவர் வெல்லம்பிட்டிய பிரதேசத்தில் வசித்து வந்த 'குடு பட்டி' என்ற புனைப்பெயரால் அறியப்பட்ட மொஹமட் ஜாஹிர் பாத்திமா ரிசானா என்ற மூன்று பிள்ளைகளின் தாயாவார்.

இந்த வழக்கை விசாரித்த கொழும்பு மேல் நீதிமன்ற நீதிபதி லங்கா ஜயரத்ன அம்மையார் இந்த தீர்ப்பை அறிவித்தார்.




குற்றஞ்சாட்டப்பட்ட பெண்ணுக்கு எதிராக முறைப்பாட்டாளர் தரப்பால் நீதிமன்றத்தில் முன்வைக்கப்பட்ட குற்றச்சாட்டுகள் நியாயமான சந்தேகத்திற்கு இடமின்றி நன்கு நிரூபிக்கப்பட்டுள்ளன என்று தீர்மானித்த பின்னர், மேல் நீதிமன்ற நீதிபதி பிரதிவாதிக்கு எதிராக இந்த ஆயுள் தண்டனையை விதித்துள்ளார்.

Post a Comment

Previous Post Next Post