கொழும்பு விகாரமகாதேவி பூங்காவை மையமாக வைத்து பிக்குகள் குழுவொன்று ஆரம்பித்த சத்தியாக்கிரகப் போராட்டம் இன்றுடன் (21) ஆறு நாட்களை எட்டியுள்ளது. வணக்கத்துக்குரிய கலகொடஅத்தே ஞானசார தேரரை விடுதலை செய்ய வேண்டும் என்பதே அவர்களின் ஒரே கோரிக்கையாகும்.
இந்த எதிர்ப்பு சத்தியாக்கிரகம் திடீரென ஆரம்பிக்கப்பட்டதல்ல. இதற்கு முன்னர் ஜனாதிபதி செயலகத்திற்கு முன்னால் தங்கியிருந்த இந்த பிக்குகள் குழு, பின்னர் புத்தசாசன அமைச்சிற்குச் சென்றது. அங்கு அமைச்சின் செயலாளருடன் கலந்துரையாடலில் ஈடுபட்ட போதிலும், தாங்கள் எதிர்பார்த்த தீர்வு கிடைக்கவில்லை என அவர்கள் தெரிவித்தனர். அந்த கலந்துரையாடலில் எதிர்பார்த்த பலன் கிடைக்காத காரணத்தினாலேயே விகாரமகாதேவி பூங்காவில் சத்தியாக்கிரகம் ஆரம்பிக்கப்பட்டது.
அதன்படி, கடந்த 16ஆம் திகதி மாலை பூங்கா வளாகத்தில் இந்த சத்தியாக்கிரகம் ஆரம்பிக்கப்பட்டது. அன்று அங்கு மேடை அமைப்பதற்கு பிக்குகள் முயற்சித்தபோது, பொலிஸாருக்கும் அவர்களுக்கும் இடையில் ஒருவித பதற்றமான சூழ்நிலை ஏற்பட்டது.
எவ்வாறாயினும், ஆறு நாட்களாக தொடர்ச்சியாக நடைபெற்று வரும் இந்த சத்தியாக்கிரகத்தில் ஈடுபட்டுள்ள பிக்குகள், வணக்கத்துக்குரிய கலகொடஅத்தே ஞானசார தேரர் விடுதலை செய்யப்படும் வரை எந்தக் காரணத்திற்காகவும் அந்த இடத்திலிருந்து வெளியேறப் போவதில்லை என வலியுறுத்துகின்றனர். அங்கு கூடாரங்கள் அமைத்து தேரர்கள் தங்கியிருக்கிறார்கள், காலை வேளையில் தானம் வழங்குவதற்காக சில இல்லற பக்தர்கள் வந்திருந்தமை புகைப்படங்களில் காணப்படுகிறது.