சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ள வணக்கத்துக்குரிய கலாகொடஅத்தே ஞானசார தேரரின் சீவரத்தை அகற்றுவதற்காக சிறைச்சாலை அதிகாரிகளால் எடுக்கப்பட்ட தீர்மானத்தை சவால் செய்து தாக்கல் செய்யப்பட்ட மனுவை விசாரிக்கும் நீதிபதிகள் குழாமில் இருந்து மேன்முறையீட்டு நீதிமன்றத் தலைவர் நீதிபதி ரொஹந்த அபேசூரிய அவர்கள் விலகியுள்ளார்.
சிறைச்சாலை அதிகாரிகளின் குறித்த தீர்மானத்தை செல்லுபடியற்றதாக்கும் உத்தரவொன்றை பிறப்பிக்குமாறு கோரி இந்த மனு தாக்கல் செய்யப்பட்டிருந்தது. அதனை பரிசீலிக்கும் நடவடிக்கைகளில் இருந்து தான் விலகுவதாக தலைவர் நீதிபதி அறிவித்ததை அடுத்து, மனுவை பரிசீலிப்பதற்காக புதிய மூவரடங்கிய நீதிபதிகள் குழாம் ஒன்றை நியமிக்கவும் அவர் நடவடிக்கை எடுத்துள்ளார்.
அதன்படி, இந்த மனுக்களை பரிசீலிப்பதற்காக நீதிபதி அமல் ரணராஜா, நீதிபதி மஹேன் கோபல்லவ மற்றும் நீதிபதி பிரியந்த பெர்னாண்டோ ஆகியோரைக் கொண்ட புதிய மேன்முறையீட்டு நீதிமன்ற நீதிபதிகள் குழாம் ஒன்று நியமிக்கப்பட்டுள்ளது.