ஒழுங்கமைக்கப்பட்ட குற்றச் செயல்களைத் தடுக்கும் சட்டம் பாராளுமன்றத்தில் சாதாரண பெரும்பான்மையால் நிறைவேற்றப்படலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

the-prevention-of-organized-crime-act-can-be-passed-by-a-simple-majority-in-parliament

அரசியலமைப்புச் சட்டத்திற்கு சவால் விடுக்கப்பட்டிருந்த ஒழுங்கமைக்கப்பட்ட குற்றங்களைத் தடுக்கும் சட்டமூலம் அரசியலமைப்புச் சட்டத்திற்கு இணக்கமானது என உயர் நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. அதன்படி, சில திருத்தங்களுக்கு உட்பட்டு அந்த சட்டமூலத்தை நிறைவேற்ற முடியும் என சபாநாயகர் வைத்தியர் ஜகத் விக்ரமரத்ன இன்று பாராளுமன்றத்திற்கு அறிவித்தார்.




அரசியலமைப்பின் 121(1) ஆம் பிரிவின் கீழ் இந்த சட்டமூலம் உயர் நீதிமன்றத்தில் சவால் விடுக்கப்பட்டிருந்ததாகவும், நீதிமன்றத்தின் தீர்மானத்தை சபைக்கு அறிவித்த சபாநாயகர் குறிப்பிட்டார்.

எவ்வாறாயினும், சட்டமூலத்தை எளிய பெரும்பான்மையுடன் நிறைவேற்றும் போது சில குறிப்பிட்ட திருத்தங்களை அதில் சேர்ப்பது கட்டாயமாகும். பதில் சட்டமா அதிபரால் முன்வைக்கப்பட்ட திருத்தங்களையும், நீதிமன்றத்தால் பரிந்துரைக்கப்பட்ட மேலதிக திருத்தங்களையும் சட்டமூலத்தின் குழுநிலை விவாதத்தின் போது சேர்க்க வேண்டும் என உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளதாக இங்கு தெரிவிக்கப்பட்டது.

கருத்துரையிடுக

புதியது பழையவை