ஹங்குரன்கெத்த பிரதேசத்தில் ஏற்பட்ட நிலச்சரிவினால் முழுமையாக அழிவடைந்த வீடொன்றின் இடிபாடுகளை அகற்றும் பணிகளில் ஈடுபட்டிருந்த இலங்கை இராணுவத்தினர், மண் குவியல்களுக்குள் இருந்து பெறுமதியான தங்க நகைகளையும் பெருந்தொகை பணத்தையும் கண்டெடுத்துள்ளனர்.
ஹங்குரன்கெத்த பிரதேசத்தில் நிலைநிறுத்தப்பட்டுள்ள 642 காலாட்படைப் பிரிவைச் சேர்ந்த குழுவினர், அனர்த்தத்திற்குள்ளான வீட்டின் இடிபாடுகளை அகற்றும் பணிகளில் ஈடுபட்டிருந்தபோது இந்தச் சொத்துக்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.இவ்வாறு கண்டெடுக்கப்பட்ட சொத்துக்களின் மொத்த மதிப்பு 50 இலட்சம் ரூபாய்க்கும் அதிகமான தங்க நகைகள் மற்றும் சுமார் 3 இலட்சம் ரூபாய் பணம் என உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. நிலத்தடியில் புதைந்திருந்த இந்த பெறுமதியான சொத்துக்களை மீட்டெடுத்த பின்னர், அரச அதிகாரி ஒருவரின் சாட்சியம் மற்றும் மேற்பார்வையின் கீழ் அதன் உரிய உரிமையாளர்களிடம் பாதுகாப்பாக ஒப்படைக்க இராணுவ அதிகாரிகள் நேற்று (16) நடவடிக்கை எடுத்துள்ளனர்.
Tags:
News