
தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகால் வாரியம் இன்று (20) காலை 8.30 மணி முதல் மாலை 4.30 மணி வரை எட்டு மணிநேரத்திற்கு கொழும்பு மாவட்டத்தின் பல பகுதிகளுக்கு நீர் விநியோகம் இடைநிறுத்தப்படும் என்று அறிவித்துள்ளது.
இந்த நீர் வெட்டு காரணமாக கொழும்பு 01 முதல் 15 வரையிலான தபால் வலயங்களுக்கும், பத்தரமுல்லை, பெலவத்த, ஹோகந்தர, கொஸ்வத்த, தலவத்துகொட, கோட்டை, இராஜகிரிய, மிரிஹான, மாதிவெல, நுகேகொட மற்றும் நாவல ஆகிய பகுதிகளுக்கும் நீர் விநியோகம் இடைநிறுத்தப்படும்.
மேலும், கொலன்னாவ, ஐ.டி.எச்., கோட்டிகாவத்த, அங்கொட, வெல்லம்பிட்டிய, ஒறுகொடவத்த, மகரகம, பொரலஸ்கமுவ, தெஹிவளை, மொரட்டுவ மற்றும் சொய்சாபுர ஆகிய பகுதிகளில் வசிப்பவர்களும் இந்த நீர் வெட்டினால் பாதிக்கப்படுவார்கள் என்று வாரியம் மேலும் தெரிவித்துள்ளது.
Tags:
News