தித்வா மரணச் சான்றிதழ் வழங்கும் விழா சமூக ஊடகங்களில் விமர்சனத்திற்குள்ளானது

cyclone_deaths_missing_certificate_issuance

"தித்வா" சூறாவளியால் ஏற்பட்ட அழிவு காரணமாக உயிரிழந்த மற்றும் காணாமல் போனவர்களின் மரணச் சான்றிதழ்களை வழங்குவதற்காக நடமாடும் சேவை தற்போது செயற்படுத்தப்பட்டு வருகிறது.




இந்த நடமாடும் சேவை, பதிவாளர் நாயகம் அலுவலகத்தின் பங்களிப்புடன் மத்திய பிராந்திய அலுவலகம் மற்றும் பிரதேச செயலகம் இணைந்து ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதுடன், சேதமடைந்த திருமண, பிறப்பு மற்றும் மரணச் சான்றிதழ்களைப் பெறுதல் மற்றும் அதற்கான ஆவணங்களைப் பெற்றுக்கொள்ளுதல் இங்கு நடைபெறுகிறது.

எவ்வாறாயினும், அனர்த்தத்தில் உயிரிழந்தவர்களின் பெயர்களை பகிரங்கமாக அறிவித்து, விழாக்கோலமாக மரணச் சான்றிதழ்களை வழங்குவதும், அந்த நிகழ்வுகளை வீடியோ மற்றும் புகைப்படங்கள் எடுத்து வெளியிடுவதும் சமூக ஊடகங்களில் கடும் விமர்சனத்திற்குள்ளாகியுள்ளது.

Post a Comment

Previous Post Next Post