அரச வர்த்தக பல்வகைப்படுத்தப்பட்ட சட்டரீதியான கூட்டுத்தாபனம் மற்றும் கூட்டுறவு மொத்த விற்பனை கூட்டுத்தாபனம் தலையிட்டு உருளைக்கிழங்கு, வெங்காயம் மற்றும் பருப்பு ஆகியவற்றை இறக்குமதி செய்வதற்கு அரசாங்கத்தின் விசேட கவனம் செலுத்தப்பட்டுள்ளது.
வர்த்தக மற்றும் விவசாய அமைச்சர்களின் தலைமையில் நேற்று (10) நடைபெற்ற உணவுப் பாதுகாப்பு குழுக் கூட்டத்தில் இது தொடர்பான விடயங்கள் வெளிப்படுத்தப்பட்டுள்ளன.
தற்போதுள்ள அனர்த்த நிலைமை காரணமாக பயிர் நிலங்களுக்கு ஏற்பட்ட சேதங்களை சாதகமாகப் பயன்படுத்தி, சில வர்த்தகர்கள் சம்பந்தப்பட்ட பொருட்களின் விலைகளை செயற்கையாக உயர்த்துவதைக் கட்டுப்படுத்துவதே இதன் முக்கிய நோக்கமாக உள்ளது.
அதன்படி, அரசாங்கத்தின் தலையீட்டுடன் இறக்குமதி செய்யப்படும் இந்த உருளைக்கிழங்கு, வெங்காயம் மற்றும் பருப்பு கையிருப்பு லங்கா சதொச மற்றும் கூட்டுறவு விற்பனை நிலையங்கள் மூலம் நுகர்வோருக்கு விற்பனை செய்வது குறித்து சம்பந்தப்பட்ட குழுவில் மேலும் விவாதிக்கப்பட்டுள்ளது.
Tags:
News