வெள்ளத்தில் சிக்கிய வாகனங்களை உடனடியாக இயக்க வேண்டாம்: நிபுணர் எச்சரிக்கை!

do-not-start-vehicles-caught-in-floods

 தித்வா சூறாவளியால் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கு காரணமாக நீரில் மூழ்கிய அல்லது நீரில் அடித்துச் செல்லப்பட்ட வாகனங்களை, முழுமையான தொழில்நுட்பப் பரிசோதனை இல்லாமல் எந்தக் காரணத்திற்காகவும் இயக்க வேண்டாம் என போக்குவரத்து பொறியியலாளர் கலாநிதி நுவன் மதனாயக்க வாகன உரிமையாளர்களைக் கேட்டுக்கொண்டுள்ளார்.



நீரில் சிக்கிய வாகனத்தை மீண்டும் இயக்க முயற்சிக்காமல் ஒரு சேவை மையத்திற்கு எடுத்துச் சென்று முதலில் சுத்தம் செய்வது அத்தியாவசியமான படியாகும். அதன் பிறகு, பிரேக்குகள், பவர் ஸ்டீயரிங், கியர் மற்றும் என்ஜின் ஆயில் உட்பட அனைத்து வகையான மசகு எண்ணெய்களையும் அகற்ற வேண்டும், அந்த எண்ணெய்கள் வெள்ளை நிறமாக மாறியிருந்தால், எஞ்சின் முழுமையாகப் பரிசோதிக்கப்பட வேண்டும் என்றும் அவர் சுட்டிக்காட்டுகிறார்.




இரண்டு மூன்று நாட்கள் முழுமையாக நீரில் மூழ்கியிருந்த ஒரு வாகனத்தின் எஞ்சின் மற்றும் கியர் பெட்டியை மீண்டும் சரிசெய்ய முடிந்தாலும், அதன் மின் அமைப்பை மீண்டும் பயன்படுத்துவது முற்றிலும் பொருத்தமற்றது என்பது பொறியியலாளரின் கருத்து. தற்காலிக பழுதுபார்ப்பு செய்யப்பட்டாலும், காலப்போக்கில் மின் சுற்றுகள் அரிப்புக்குள்ளாகி பெரிய இயந்திர சிக்கல்கள் ஏற்படக்கூடும் என்பதால், காப்பீட்டுத் திட்டங்கள் மூலம் அந்த வாகனங்களை பயன்பாட்டிலிருந்து அகற்றுவது அல்லது மூன்றாம் தரப்பு காப்பீட்டு உரிமையாளர்கள் மின் அமைப்பை முழுமையாகப் புதிதாகச் சீரமைப்பது மிகவும் பொருத்தமானது.

இது தவிர, நீரினால் சேதமடைந்த வாகனங்களின் சஸ்பென்ஷன் அமைப்புகளில் (Suspension) உள்ள பழைய கிரீஸை முழுமையாக அகற்றி புதியதாகப் பூசவும், அதற்குரிய ரப்பர் பாகங்களை புதிதாகப் பொருத்தவும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் கலாநிதி நுவன் மதனாயக்க மேலும் வலியுறுத்தினார்.

Post a Comment

Previous Post Next Post