இலங்கை தேசிய கிரிக்கெட் அணியின் முன்னணி துடுப்பாட்ட வீரர் குசல் மெண்டிஸ் துபாயில் அவசர சத்திரசிகிச்சைக்கு உட்படுத்தப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
அவரது சிறுநீர்ப்பையில் கற்கள் (Bladder Stones) இருப்பது கண்டறியப்பட்டதை அடுத்து இந்த சத்திரசிகிச்சை மேற்கொள்ளப்பட்டுள்ளது.
தற்போது நடைபெற்று வரும் ILT20 கிரிக்கெட் தொடரில் பங்கேற்பதற்காக குசல் மெண்டிஸ் துபாயில் தங்கியிருந்தார்.
எவ்வாறாயினும், சத்திரசிகிச்சைக்குப் பின்னர் மெண்டிஸ் தற்போது படிப்படியாக குணமடைந்து வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
இந்த அவசர சத்திரசிகிச்சை காரணமாக, அவருக்கு ILT20 தொடரின் எஞ்சிய அனைத்து போட்டிகளும் இழக்கப்படும்.
Tags:
News
