சிறு ஸ்ரீபாத மலையில் இருந்து தவறி விழுந்த பிரித்தானியப் பெண்ணை மீட்ட CREW குழுவின் சாகச நடவடிக்கை (காணொளி)

gossiplanka image 1

 எல்ல பொலிஸ் பிரிவுக்குட்பட்ட துனகணு பிரதேசத்தில் அமைந்துள்ள உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகளிடையே பிரபலமான சிறு ஸ்ரீபாத மலையைப் பார்வையிட வந்த பிரித்தானியப் பெண் ஒருவர் நேற்று (18) மாலை ஒரு பள்ளத்தில் விழுந்து பலத்த காயமடைந்துள்ளார்.



இவ்வாறு விபத்துக்குள்ளானவர் 32 வயதுடைய பிரித்தானியப் பிரஜையான கேத்தரின் அலிஸ் என்பவராவார். அவர் மலையேறிக் கொண்டிருந்தபோது 50 முதல் 100 அடி உயரமுள்ள பள்ளத்தில் விழுந்ததாக எல்ல பொலிஸார் தெரிவித்தனர்.

பள்ளத்தில் விழுந்து காயமடைந்த வெளிநாட்டுப் பெண்ணை மீட்பதற்காக, எல்ல பிரதேசத்தில் உள்ள ஒரு ஹோட்டலின் CREW சிறப்பு மீட்புக் குழுவும் எல்ல பொலிஸ் அதிகாரிகளும் இணைந்து பெரும் முயற்சி மேற்கொண்டுள்ளனர்.

மிகவும் சிரமப்பட்டு பள்ளத்தில் இருந்து மீட்கப்பட்ட இந்தப் பெண், 1990 சுவசரியா ஆம்புலன்ஸ் சேவை மூலம் உடனடியாக பதுளை போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

காணொளி இங்கே கிளிக் செய்யவும்


gossiplanka image 2

Post a Comment

Previous Post Next Post