இன்று (01) முதல் கசினோ வரிகள் உயர்வு

new-sri-lanka-gambling-tax

இலங்கையில் இயங்கி வரும் கேசினோ (Casino) மற்றும் பந்தய வணிகங்கள் தொடர்பாக சில புதிய வரித் திருத்தங்கள் இன்று (ஜனவரி 01) முதல் அமுலுக்கு வருவதாக உள்நாட்டு இறைவரித் திணைக்களம் அறிவித்துள்ளது. 2025 ஆம் ஆண்டின் 25 ஆம் இலக்க பந்தயம் மற்றும் சூதாட்ட வரி (திருத்த) சட்டத்தின் மூலம் இந்த திருத்தங்கள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. அதற்கிணங்க, இந்த புதிய வரி கொள்கை நாட்டில் அமுலுக்கு வரும்.




இந்த புதிய திருத்தங்களின்படி, இதுவரை அமெரிக்க டொலர் 50 ஆக இருந்த கேசினோ நுழைவு வரி (Casino Entrance Levy) அமெரிக்க டொலர் 100 ஆக அதிகரிக்கப்பட்டுள்ளது. அதன்படி, ஒரு இலங்கை பிரஜை ஒரு கேசினோவுக்குள் நுழையும் பட்சத்தில், சம்பந்தப்பட்ட வணிக நிறுவனம் அந்த நபரிடமிருந்து அமெரிக்க டொலர் 100 அல்லது அதற்கு சமமான வெளிநாட்டு நாணயம் அல்லது அதற்கு சமமான இலங்கை ரூபாயில் நுழைவுக் கட்டணத்தை வசூலிக்க வேண்டும் என்று உள்நாட்டு இறைவரித் திணைக்களம் சுட்டிக்காட்டுகிறது.

மேலும், பந்தயம் மற்றும் சூதாட்ட வணிகங்களில் ஈடுபடும் நிறுவனங்கள் அரசுக்கு செலுத்த வேண்டிய வரி சதவீதத்திலும் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. அதன்படி, இதுவரை 15 சதவீதமாக இருந்த வரி விகிதம் தற்போது 18 சதவீதமாக உயர்த்தப்பட்டுள்ளது. மாதத்திற்கு ஒரு மில்லியன் ரூபாய்க்கு மேல் மொத்த வசூல் (Gross Collection) கொண்ட பந்தய முகவர்கள் மற்றும் சூதாட்ட வணிகங்களுக்கு இந்த புதிய 18 சதவீத வரி விகிதம் பொருந்தும் என்று அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.




இந்த புதிய வரித் திருத்தங்கள் இன்று முதல் அமுலுக்கு வருவதால், அனைத்து கேசினோ உரிமையாளர்களும் மற்றும் பந்தய வணிக நிறுவனங்களும் இந்த புதிய முறைக்கு இணங்க செயல்பட வேண்டும் என்று உள்நாட்டு இறைவரித் திணைக்களம் அறிவுறுத்தியுள்ளது.

Post a Comment

Previous Post Next Post