பெல்லன நீக்கப்பட்ட பிறகு வந்த மரண அச்சுறுத்தல்கள் காரணமாக ஜாசிங்க பாதுகாப்பு கோருகிறார்

jasinghe-requests-protection-due-to-death-threats-received-after-bellana-was-removed

சுகாதார செயலாளர் வைத்தியர் அனில் ஜாசிங்க, தனக்கு விடுக்கப்பட்டுள்ள கொலை அச்சுறுத்தல்களுக்கு மத்தியில் தனது பாதுகாப்பை உறுதிப்படுத்துமாறும், அச்சுறுத்தல்களுடன் தொடர்புடையவர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்குமாறும் கோரி பொலிஸ்மா அதிபர் பிரியந்த வீரசூரியவுக்கு எழுத்து மூலம் அறிவித்துள்ளார். பணி இடைநிறுத்தம் செய்யப்பட்ட சுகாதாரத்துறை அதிகாரி ஒருவர் மேலும் சிலரை பயன்படுத்தி இந்த அச்சுறுத்தல்களை மேற்கொண்டு வருவதாக சுகாதார செயலாளர் பொலிஸ்மா அதிபருக்கு அனுப்பிய கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.




குறிப்பாக, சிவில் சமூக செயற்பாட்டாளர் அசேல சம்பத் சமூக ஊடகங்களில் வெளியிட்ட அறிக்கை தொடர்பாகவும் வைத்தியர் ஜாசிங்க பொலிஸ்மா அதிபரின் கவனத்தை ஈர்த்துள்ளார். தனக்கு குண்டு துளைக்காத வாகனம் ஒன்றை தயார் செய்யுமாறு குறிப்பிட்ட சிவில் சமூக செயற்பாட்டாளர் வெளியிட்ட அந்த அறிக்கை குறித்து சுகாதார செயலாளர் தனது கடிதத்தில் விசேடமாக குறிப்பிட்டுள்ளார்.

அரச சேவை ஆணைக்குழுவின் சுகாதார சேவைகள் குழு வைத்தியர் பெல்லனாவை பணி இடைநிறுத்தம் செய்வதற்கு முன்னர், சுகாதார செயலாளர் பொலிஸ்மா அதிபரின் இந்த தலையீட்டைக் கோரியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

news-2025-12-31-192112

Post a Comment

Previous Post Next Post