இறக்குமதி செய்யப்பட்ட பால்மாவின் ஒரு கிலோகிராமின் விலை நாளை மறுதினம் (16) முதல் 125 ரூபாவால் குறையும்.

the-price-of-a-kilogram-of-imported-milk-powder-will-be-reduced-by-rs-125-from-the-day-after-tomorrow-16

இறக்குமதி செய்யப்பட்ட பால் மாவின் விலையை குறைக்க பால் மா இறக்குமதியாளர்கள் தீர்மானித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி, நாளை மறுதினம் (16) முதல் அமுலுக்கு வரும் வகையில் இறக்குமதி செய்யப்பட்ட ஒரு கிலோகிராம் பால் மாவின் விலை 125 ரூபாவினாலும், 400 கிராம் பால் மா பக்கெட்டின் விலை 50 ரூபாவினாலும் குறையும்.




இந்த விலை திருத்தம் குறித்து வர்த்தக, வாணிப, உணவுப் பாதுகாப்பு மற்றும் கூட்டுறவு அபிவிருத்தி அமைச்சு மேலும் உறுதிப்படுத்தியுள்ளது.

உலக சந்தையில் பால் மாவின் விலை குறைவடைந்ததன் காரணமாக அதன் நன்மையை நுகர்வோருக்கு வழங்கும் நோக்கில் இந்த விலைக் குறைப்பு தீர்மானிக்கப்பட்டுள்ளதாக இறக்குமதியாளர்கள் தெரிவிக்கின்றனர்.

Post a Comment

Previous Post Next Post