அம்பலாங்கொடை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட ஒலகம பிரதேசத்தில் நிர்மாணிக்கப்பட்டு வரும் 18 மாடிகளைக் கொண்ட கட்டிடமொன்றில் இருந்து அடையாளம் தெரியாத ஆண் ஒருவரின் சடலம் மீட்கப்பட்டுள்ளது. அவரது அடையாளம் இதுவரை உறுதிப்படுத்தப்படவில்லை.
அம்பலாங்கொடை பொலிஸ் நிலையத்திற்கு கிடைத்த தகவலின் அடிப்படையில் மேற்கொள்ளப்பட்ட தேடுதலின் போது, குறித்த கட்டிடத்தின் 15வது மாடியில் இருந்து பொலிஸ் அதிகாரிகளால் இந்த சடலம் கண்டுபிடிக்கப்பட்டது.
நேற்று (02) பகல் இந்த சடலம் கண்டுபிடிக்கப்பட்டதுடன், உயிரிழந்தவர் யார் என்பது தொடர்பில் இதுவரை எந்த தகவலும் உறுதிப்படுத்தப்படவில்லை என பொலிஸார் தெரிவித்தனர்.
சடலம் தற்போது பிரேத பரிசோதனைக்காக பலபிட்டிய வைத்தியசாலையின் சவக்கிடங்கில் வைக்கப்பட்டுள்ளதுடன், சம்பவம் தொடர்பில் அம்பலாங்கொடை பொலிஸார் மேலதிக விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.