பாதுக்க பிரதேசத்தில் வசித்து வந்த ஆசிரியர் ஒருவர் கொஸ்கம பிரதேசத்தில் உள்ள ஒரு வீட்டில் தீக்காயங்களுடன் இறந்து கிடந்த நிலையில் நேற்று (31) கண்டுபிடிக்கப்பட்டுள்ளார். இவ்வாறு துரதிர்ஷ்டவசமாக உயிரிழந்தவர் பாதுக்க, மின்விசித்துருகம, ஹல்பே பிரதேசத்தில் வசித்து வந்த 39 வயதுடைய மொரதேகே நந்தகுமார என்பவராவார்.
கொஸ்கம பொலிஸார் தெரிவித்ததன்படி, கொஸ்கம, மூனமலை தோட்டம், வாலிபால் மைதானத்திற்கு அருகில் அமைந்துள்ள ஒரு வீட்டில் இந்த சடலம் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதுடன், அவர் அந்த வீட்டில் வாடகை அடிப்படையில் தற்காலிகமாக வசித்து வந்துள்ளார். உயிரிழந்தவர் ஹங்வெல்ல இலுக்கோவிட்ட வித்தியாலயத்தில் கடமையாற்றி வந்த பாடசாலை ஆசிரியர் ஒருவர் என்பது ஆரம்பகட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளது.
வீட்டில் உறங்கிக் கொண்டிருந்தபோது உடலில் தீப்பிடித்ததா, மின் கசிவு காரணமாக ஏற்பட்ட தீ விபத்தினால் இந்த அனர்த்தம் ஏற்பட்டதா அல்லது இது தீ வைத்துக்கொண்டு செய்த தற்கொலையா என்பது குறித்து இதுவரை உறுதியான தகவல் எதுவும் வெளியாகவில்லை. இச்சம்பவம் தொடர்பில் கொஸ்கம பொலிஸார் விரிவான விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.