கல்விச் சீர்திருத்தங்களை அமுல்படுத்துவதில் தாமதம் செய்வதன் மூலம் எந்தவொரு பிரச்சினையையும் தீர்க்க முடியாது என எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச இன்று வலியுறுத்தினார்.
வரலாறு மற்றும் STEM கல்வி தொடர்பான பிரச்சினைகளும் தாமதங்கள் காரணமாக தீர்க்கப்படாது என பிரேமதாச ஊடகங்களிடம் கருத்துத் தெரிவித்தார்.
எமது பிள்ளைகளின் எதிர்காலம் எப்படி இருக்கும் என்று தனக்கோ அல்லது மக்களுக்கோ, பெற்றோருக்கோ அல்லது பிள்ளைகளுக்கோ கூட தெரியாது என்றும் எதிர்க்கட்சித் தலைவர் இங்கு குறிப்பிட்டார்.
பிரதமர் ஹரினி அமரசூரியவுக்கு எதிராகக் கொண்டுவரப்படும் நம்பிக்கையில்லாப் பிரேரணை உரிய நேரத்தில் சபாநாயகரிடம் கையளிக்கப்படும் என்றும் அவர் மேலும் தெரிவித்தார்.