இந்தியப் பல்கலைக்கழக விரிவுரை ஒன்றில் தான் கலந்துகொண்டது போலவே எதிர்காலத்திலும் மேலும் பல வாய்ப்புகள் கிடைக்கும் என்றும், இந்த அங்கீகாரத்தை பொறுத்துக்கொள்ள முடியாமல் அரசாங்கம் கலக்கமடைந்துள்ளதாகவும் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் தேசிய அமைப்பாளரும் பாராளுமன்ற உறுப்பினருமான நாமல் ராஜபக்ஷ தெரிவித்தார். இன்று கொழும்பு நீதவான் நீதிமன்றத்திற்கு வந்தபோது ஊடகவியலாளர்கள் எழுப்பிய கேள்விகளுக்கு பதிலளிக்கும்போதே அவர் இவ்வாறு தெரிவித்தார். இங்கு மேலும் கருத்து தெரிவித்த நாமல் ராஜபக்ஷ
"கலிங்கா பல்கலைக்கழகத்தில் இந்தியக் குடியரசு தினத்தன்று ஒரு சிறப்பு விரிவுரைக்கு எனக்கு அழைப்பு விடுக்கப்பட்டிருந்தது. நானும் எங்கள் நாடாளுமன்ற உறுப்பினர்கள் குழுவும் பல்கலைக்கழகத்துடன் இணைந்து விரிவுரை அளித்துவிட்டு வந்தோம். இங்கே சிலர் குழப்பமடைந்துள்ளனர், ஒருவருக்கு விரிவுரை வழங்க ஒரு பல்கலைக்கழகம் அழைப்பு விடுத்தால் குழப்பமடையத் தேவையில்லை. எனவே, இது முதல் விரிவுரை அல்ல, இன்னும் பல விரிவுரைகள் உள்ளன என்று அவர்களுக்குச் சொல்ல வேண்டும். எனக்குக் கிடைக்கும் அங்கீகாரத்தையோ, இன்னொருவருக்குக் கிடைக்கும் அங்கீகாரத்தையோ தேடுவதை விட, அரசாங்கம் வந்த நோக்கத்தை நிறைவேற்ற முடியாததால்தான் குழப்பமடைந்துள்ளது. இவர்கள் நாட்டின் மக்களுக்கு சேவை செய்வதற்கும், இந்த அமைப்பை மாற்றுவதற்கும் வந்தவர்கள்.
இருந்ததை விடவும் இந்த அமைப்பு பின்னோக்கி இழுக்கப்பட்டு, முழு அமைப்பையும் அழிக்கும் நிலைக்கு இந்த அரசாங்கம் செயல்படுகிறது. அதனால்தான் இவர்கள் குழப்பமடைந்துள்ளனர் என்று எனக்குத் தோன்றுகிறது. ஏனென்றால், சமூகத்திலும் நாட்டிலும் தங்களுக்கு எதிர்ப்பு அதிகரித்து வருகிறது என்பதை அவர்களும் உணர்ந்திருப்பார்கள். ஆம், சில மாதங்களுக்கு முன்பு பாராளுமன்றத்திலேயே ஒரு அமைச்சர் எழுந்து, ஜனவரி மாதம் சிறையில் அடைப்போம் என்று கூறினார். பாராளுமன்றத்தின் அமைச்சரவை அமைச்சர் ஒருவர் முன்வரிசையில் எழுந்து, ஜனவரி மாதம் பார்ப்போம், சிறையில் அடைப்போம், தேவையான அழைப்பு வரலாம் என்று கூறினார். ஆனால், எனக்கு வருத்தமாக இருக்கிறது. அந்தரே ராஜாவாகிவிட்டார். இன்று அந்தரே ஒரு ராஜாவாக இருக்கும்போது, பல்லவத்தையிலிருந்து நியமிக்கப்பட்ட பொலிஸ் மாஅதிபர் நாட்டில் பொலிஸ் எவ்வாறு செயல்படுகிறது என்பது பற்றி அறியவில்லை."