நவகமுவ Osprey Clothing தீப்பிடித்து எரிகிறது (வீடியோ)

nawagamuwa-osprey-clothing-catches-fire-video

கடுவெல, நவகமுவ பிரதேசத்தில் லோ லெவல் (Low Level) வீதியில் அமைந்துள்ள ‘Osprey Clothing’ தொழிற்சாலையில் இன்று (08) திடீர் தீ விபத்து ஏற்பட்டுள்ளது.




இந்த தீயை அணைப்பதற்காக விரைந்து செயல்பட்ட தீயணைப்புப் படையினர், தற்போது ஐந்துக்கும் மேற்பட்ட தீயணைப்பு வாகனங்களை சம்பவ இடத்திற்கு அனுப்பி வைத்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

தொழிற்சாலையில் ஏற்பட்ட இந்த திடீர் அனர்த்த நிலை காரணமாக, நவகமுவ லோ லெவல் வீதியை அண்மித்த பகுதிகளில் தற்போது கடும் வாகன நெரிசல் ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

gossiplanka image

Post a Comment

Previous Post Next Post