தெஹிவளை, கடல் வீதியில் அமைந்துள்ள 'சீ ஷார்க்' (Sea Shark) சுற்றுலா ஹோட்டலின் உரிமையாளர் வெள்ளிக்கிழமை (09) இரவு 8.45 மணியளவில் சுட்டுக் கொல்லப்பட்டுள்ளார். பலத்த காயங்களுடன் களுபோவில போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர், 57 வயதான அவர் உயிரிழந்தார்.
முகமூடி அணியாத இருவர் மோட்டார் சைக்கிளில் வந்து இந்த துப்பாக்கிச் சூட்டை நடத்தியுள்ளனர். சம்பவம் நடந்தபோது ஹோட்டல் உரிமையாளர் தனது பேத்தியுடன் இருந்ததாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
இந்த துப்பாக்கிச் சூடு இரண்டு பாதாள உலகக் குழுக்களுக்கு இடையிலான மோதலின் விளைவாக இருக்கலாம் என்று பொலிஸார் சந்தேகிக்கின்றனர். இச்சம்பவம் தொடர்பாக கல்கிஸ்ஸை பிரிவுக் குற்றப் புலனாய்வுப் பணியகம், பொலிஸ் விசேட அதிரடிப்படை மற்றும் தெஹிவளை பொலிஸார் இணைந்து விரிவான விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.
இந்த ஆண்டு ஒழுங்கமைக்கப்பட்ட குற்றவாளிகளால் நடத்தப்பட்ட இரண்டாவது துப்பாக்கிச் சூடு இதுவாகும். இந்த துப்பாக்கிச் சூடுகளால் இதுவரை இருவர் உயிரிழந்துள்ளதுடன், மேலும் இருவர் காயமடைந்துள்ளனர்.