
இந்தியப் பிரதமர் நரேந்திர மோடியின் விசேட அழைப்பின் பேரில், ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க AI Impact Summit 2026 மாநாட்டில் பங்கேற்பதற்காக இன்று (17) பிற்பகல் இந்தியாவுக்குப் புறப்படவுள்ளார். மனிதகுலத்தின் நலனுக்காக செயற்கை நுண்ணறிவை பொறுப்புடன் பயன்படுத்துவதை நோக்கமாகக் கொண்டு இந்தியப் பிரதமர் நரேந்திர மோடியின் தலைமையில் இந்த உச்சிமாநாடு நடைபெறவுள்ளதுடன், ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க எதிர்வரும் 19ஆம் திகதி உச்சிமாநாட்டில் உரையாற்றவுள்ளார்.
ஐந்து நாட்கள் நடைபெறும் இந்த உச்சிமாநாட்டில் 20 நாடுகளின் தலைவர்களும், 45க்கும் மேற்பட்ட நாடுகளின் பிரதிநிதிகளும் பங்கேற்கவுள்ளனர்.மேலும், இந்த உச்சிமாநாட்டில் செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்தின் எதிர்காலப் போக்கு மற்றும் உலகளாவிய சவால்களை சமாளிக்க அதை எவ்வாறு பயன்படுத்தலாம் என்பது குறித்து விரிவாக விவாதிக்கப்படவுள்ளது. இந்த இந்தியப் பயணத்தின் போது, ஜனாதிபதி இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி உட்பட பல நாடுகளின் தலைவர்களுடன் இருதரப்பு பேச்சுவார்த்தை நடத்தவும் திட்டமிடப்பட்டுள்ளது.