அவசர மருத்துவ நிலை காரணமாக, உதவிப் பொலிஸ் அத்தியட்சகர் ரோஹான் ஓலுகல தற்போது கொழும்பு தேசிய வைத்தியசாலையின் தீவிர சிகிச்சைப் பிரிவில் சிகிச்சை பெற்று வருகிறார்.
கடந்த 30ஆம் திகதி இரவு ஏற்பட்ட திடீர் உடல்நலக்குறைவு காரணமாக, அவர் ஆரம்ப சிகிச்சைக்காக முதலில் கொத்தலாவல பாதுகாப்பு பல்கலைக்கழக வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டார்.
அவர் அந்த வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்தபோது, பொலிஸ் மாஅதிபர் பிரியந்த வீரசூரியவின் அறிவுறுத்தலின் பேரில் ஒரு விசேட மருத்துவக் குழு உதவிப் பொலிஸ் அத்தியட்சகரை பரிசோதித்ததுடன், அந்த மருத்துவ பரிந்துரைகளின் அடிப்படையில் மேலதிக சிகிச்சைக்காக அவர் கொழும்பு தேசிய வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளார்.
தற்போது அவர் தேசிய வைத்தியசாலையின் தீவிர சிகிச்சைப் பிரிவில் மருத்துவக் கண்காணிப்பில் உள்ளார். ஊடகவியலாளர்களின் கேள்விக்கு பதிலளித்த பொலிஸ் மாஅதிபர், ரோஹான் ஓலுகலவின் உடல்நிலை தற்போது தேறி வருவதாக உறுதிப்படுத்தினார்.