திடீர் செயலிழப்பு காரணமாக மொரட்டுவ, தெஹிவளை, கொலன்னாவ நீர் விநியோகம் நிறுத்தப்பட்டுள்ளது

moratuwa-dehiwala-kolannawa-water-supply-stopped-due-to-a-sudden-breakdown

பிரதான நீர் விநியோகக் குழாயில் ஏற்பட்ட திடீர் உடைப்பு காரணமாக அம்பத்தலையிலிருந்து தெஹிவளை வரையான பல பகுதிகளுக்கு நீர் விநியோகம் இடைநிறுத்தப்பட்டுள்ளதாக தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகால் சபை தெரிவித்துள்ளது.




இதன்படி, மொரட்டுவ, ராவதவத்த, சொய்சாபுர, ரத்மலான, கல்கிஸ்ஸை, தெஹிவளை, வெள்ளவத்தை, பாமன்கடை, முல்லேரியா மற்றும் கொலன்னாவ ஆகிய பகுதிகளுக்கு இந்த நீர் வெட்டு நேரடியாகப் பாதிக்கும். அத்துடன், பத்தரமுல்லைப் பகுதிக்கு குறைந்த அழுத்தத்தில் நீர் விநியோகிக்கப்படும் என்றும் சபை தெரிவித்துள்ளது.

தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகால் சபை மேலும் தெரிவிக்கையில், நாளை (19) காலை 6.00 மணிக்கு முன்னர் நீர் விநியோகத்தை வழமைக்குக் கொண்டுவர எதிர்பார்க்கப்படுகிறது.

Post a Comment

Previous Post Next Post