2022 மே 9 அன்று போராட்டத்திற்கு எதிராக அரசாங்கம் மேற்கொண்ட அடக்குமுறையால் ஆத்திரமடைந்த இளைஞர்கள், அமரகீர்த்தி அத்துகோரலவும் அவரது பாதுகாவலரும் பயணித்த வாகனத்தை நிறுத்தி அதைச் சுற்றி ஆர்ப்பாட்டம் செய்தபோது, கூட்டத்தை அச்சுறுத்தும் வகையில் வாகனத்திற்குள் இருந்த பாதுகாப்பு அதிகாரி இளைஞர்கள் மீது துப்பாக்கிச் சூடு நடத்தினார். அந்த நேரத்தில் ஒரு இளைஞனும் பின்னர் மருத்துவமனையில் மற்றொரு இளைஞனும் உயிரிழந்தனர்.
அந்த மரணங்களுக்கு அமைச்சரின் பாதுகாப்பு அதிகாரியே பொறுப்பு. இந்தத் தாக்குதலுக்குப் பிறகு, இளைஞர்கள் அவர்களைத் துரத்திச் சென்றபோது, வாகனத்தில் இருந்து இறங்கிய இருவரும் அருகிலுள்ள ஆயத்த ஆடை நிறுவனக் கட்டிடத்திற்குள் நுழைந்தனர். அவர்களைப் பின்தொடர்ந்து சென்ற இளைஞர்கள், அவர்களது சொந்த துப்பாக்கிகளால் அவர்களைக் கொன்றனர். இருப்பினும், இளைஞர்கள் முதலில் அவர்கள் தற்கொலை செய்து கொண்டதாகவே சாட்சியமளித்தனர்.
நிராயுதபாணியான போராட்டக் களத்தில் மேடைகள் அழிக்கப்பட்டு மக்கள் விரட்டப்பட்ட பின்னர், நாடு முழுவதும் குழப்பமான சூழ்நிலை நிலவியது. அன்றைய தினம் பிரதமராக இருந்த மஹிந்த ராஜபக்ஷவின் இராஜினாமா மற்றும் அமைச்சர்களின் வீடுகள் தீக்கிரையாக்கப்பட்ட துரதிர்ஷ்டவசமான சம்பவங்கள் நிறைந்த நாளாகவும் அது அமைந்தது.