டீசல் விலை அதிகரித்ததால், பஸ் கட்டணத்தை அதிகரிக்க கெமுணு விரும்புகிறாராம், ஆனால் நிலான் மறுக்கிறாராம்.

due-to-the-increase-in-the-price-of-diesel-gemunu-wants-nilan-to-increase-bus-fares

நேற்று (09) நள்ளிரவு முதல் அமுலுக்கு வரும் வகையில் டீசல் விலை அதிகரித்த போதிலும், தற்போதுள்ள பஸ் கட்டணங்களில் எவ்வித மாற்றமும் செய்யப்பட மாட்டாது என தேசிய போக்குவரத்து ஆணைக்குழு அறிவித்துள்ளது. இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனத்தினால் மேற்கொள்ளப்பட்ட அண்மைய விலை திருத்தத்திற்கமைய, ஒரு லீற்றர் ஆட்டோ டீசலின் விலை 22 ரூபாயினாலும், ஒரு லீற்றர் லங்கா சுப்பர் டீசலின் விலை 24 ரூபாயினாலும் அதிகரிக்கப்பட்டுள்ளது.




எவ்வாறாயினும், இந்த எரிபொருள் விலை அதிகரிப்பு பஸ் கட்டண திருத்தத்தை மேற்கொள்ளும் அளவுக்கு போதுமான தாக்கத்தை ஏற்படுத்தாது என தேசிய போக்குவரத்து ஆணைக்குழுவின் பணிப்பாளர் நாயகம் கலாநிதி நிலான் மிராண்டா வலியுறுத்தியுள்ளார். அதன்படி, பயணிகளிடமிருந்து தற்போது அறவிடப்படும் கட்டண முறைமையை மேலும் அதேபோன்று பேணுவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளதாகவும் அவர் சுட்டிக்காட்டினார்.

இதற்கு மாறான கருத்தை வெளியிட்ட இலங்கை தனியார் பஸ் உரிமையாளர்கள் சங்கம், டீசல் விலை அதிகரிப்பிற்கு ஏற்ப பஸ் கட்டணத்தை கட்டாயம் அதிகரிக்க வேண்டும் என தெரிவித்துள்ளது. இன்று (10) தமது சங்கத்தின் பிரதிநிதிகள் விசேட கலந்துரையாடலை நடத்தி கட்டணத்தை எவ்வளவு அதிகரிக்க வேண்டும் என்பது தொடர்பில் தீர்மானிப்பார்கள் என அச்சங்கத்தின் தலைவர் கெமுனு விஜேரத்ன தெரிவித்தார்.

Post a Comment

Previous Post Next Post