தம்புள்ள இப்பாகட்டுவ நீர்த்தேக்கத்தில் மிதக்கும் சூரிய மின் உற்பத்தி நிலையத்திற்கு தடை உத்தரவு

blockade-of-floating-solar-panel-plant-in-dambulla-ibbankatua-reservoir

தம்புள்ள இபன்கட்டுவ நீர்த்தேக்கத்தில் 18 ஏக்கர் பரப்பளவில் அமைக்க திட்டமிடப்பட்டிருந்த மிதக்கும் சூரிய சக்தி திட்டம் தற்காலிகமாக இடைநிறுத்தப்பட்டுள்ளது. இது தொடர்பாக எதிர்காலத்தில் மேற்கொள்ளப்படவுள்ள விரிவான சாத்தியக்கூறு ஆய்வு அறிக்கையின் பின்னர் திட்டத்தின் எதிர்கால நடவடிக்கைகள் குறித்து தீர்மானிக்கப்படும்.




நீர்த்தேக்கப் பாதுகாக்கப்பட்ட பகுதிகளில் வனப் பயிர்ச்செய்கையை ஆரம்பிக்கும் திட்டத்தில் கலந்துகொண்டு இலங்கை மகாவலி அதிகார சபையின் பணிப்பாளர் நளிந்த திலகரத்ன ஊடகங்களுக்கு கருத்துத் தெரிவிக்கையில், இதற்கு முன்னர் நடைமுறைப்படுத்தப்பட்ட இவ்வாறான திட்டங்களின் முன்னேற்றம் குறித்து ஆய்வு நடத்த மகாவலி அதிகார சபையின் பணிப்பாளர் சபை தீர்மானித்துள்ளதாகத் தெரிவித்தார். ஒரு தனியார் நிறுவனத்தால் செயல்படுத்த திட்டமிடப்பட்டுள்ள இந்தத் திட்டத்திற்கு இதுவரை பதினாறு அரச நிறுவனங்கள் ஒப்புதல் அளித்துள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.

இந்த திட்டத்திற்கு மீண்டும் அனுமதி வழங்குவதா என்பதை தீர்மானிக்கும் முன், சம்பந்தப்பட்ட அரச நிறுவனங்கள் அதற்கு ஒப்புதல் அளித்த விதம் மற்றும் உள்ளூர் மக்களிடமிருந்து எழும் பொது எதிர்ப்புகள் குறித்து தீவிர கவனம் செலுத்தப்படும் என்று அவர் சுட்டிக்காட்டினார். மேலும், கிரிஇபன்கார சந்திரிகா குளம் நீர்த்தேக்கத்தில் தற்போது நடைமுறையில் உள்ள மிதக்கும் சூரிய சக்தி திட்டத்தின் வெற்றி மற்றும் முன்னேற்றத்தை கருத்தில் கொண்டு இந்த இபன்கட்டுவ திட்டத்திற்கு ஒப்புதல் அளிப்பது குறித்து பரிசீலிக்கப்படும் என்றும் திலகரத்ன மேலும் தெரிவித்தார்.




இதற்கிடையில், இந்த திட்டத்தால் நீர்த்தேக்கத்திற்கும் அதைச் சுற்றியுள்ள சூழலுக்கும் கடுமையான சேதம் ஏற்படக்கூடும் என்பதால், தாம் இதற்கு கடுமையாக எதிர்ப்பு தெரிவிப்பதாக தம்புள்ள நகர மேயர் வசந்த ராஜமந்திரி வலியுறுத்தினார். தம்புள்ள, கெக்கிராவ மற்றும் ஹபரண உட்பட பல பகுதிகளில் வாழும் ஏராளமான மக்கள் தங்கள் அன்றாட தேவைகளுக்காக இபன்கட்டுவ நீர்த்தேக்கத்தை நேரடியாக நம்பியிருப்பதாகவும் மேயர் சுட்டிக்காட்டினார்.

Post a Comment

Previous Post Next Post