எரிபொருள் விலை அதிகரிப்புடன், பாடசாலை மாணவர் போக்குவரத்து வாகனங்கள் இன்று (10) முதல் அமுலுக்கு வரும் வகையில் தமது கட்டணங்களை 5% ஆல் அதிகரிக்க தீர்மானித்துள்ளன.
அகில இலங்கை பாடசாலை மாணவர் போக்குவரத்து சங்கத்தின் தலைவர் லலித் சந்திரசிறி பெர்னாண்டோ ஊடகவியலாளர் சந்திப்பில் கருத்து தெரிவிக்கையில், பல சந்தர்ப்பங்களில் எரிபொருள் விலை திருத்தப்பட்ட போதிலும், நாட்டின் நிலைமை காரணமாக போக்குவரத்து கட்டணங்களில் எந்த மாற்றமும் செய்யப்படவில்லை என்றார்.
ஆனால் இம்முறை எரிபொருள் விலை 22 ரூபாவினால் அதிகரிக்கப்பட்டதால் போக்குவரத்து கட்டணத்தையும் அதிகரிக்க வேண்டியுள்ளதாக அவர் மேலும் தெரிவித்தார்.
ஏனைய சங்கங்களுடன் கலந்துரையாடி இந்த முடிவு எட்டப்பட்டதாக தலைவர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கையில் தெரிவித்தார்.
அதன்படி, குறித்த கட்டணத் திருத்தம் இன்று முதல் அமுலுக்கு வரும் என லலித் சந்திரசிறி பெர்னாண்டோ தெரிவித்தார்.
அங்கு மேலும் கருத்து தெரிவித்த லலித் சந்திரசிறி பெர்னாண்டோ,
”தூங்கி எழுந்ததும் திடீரென எண்ணெய் விலை உயர்ந்துவிட்டது.. நாங்கள் ஒரு போக்குவரத்து சங்கமாக கட்டணங்களை 5% அதிகரிக்க முடிவு செய்தோம்.. அதன்படி, ஒரு பாடசாலை மாணவரின் கட்டணம் 10,000 ரூபாவாக இருந்தால், கட்டணம் 500 ரூபாவால் அதிகரிக்கும்... எரிபொருள் விலை 22 ரூபாவால் அதிகரிப்பது போக்குவரத்து துறையில் உள்ள எங்களை கடுமையாக பாதிக்கிறது... விருப்பமில்லாவிட்டாலும் இந்த முடிவை எடுக்க வேண்டியிருந்தது.. மற்ற சங்கங்கள் மற்றும் அதிகாரிகளுடன் கலந்துரையாடிய பின்னரே இந்த முடிவை எடுத்தோம்.”