QR குறியீடு பிரச்சினைகள் குறித்து அரசாங்க தகவல் திணைக்கள பணிப்பாளர் நாயகத்திடமிருந்து ஓர் அறிவிப்பு

an-announcement-from-the-director-general-of-government-information-on-qr-code-issues

QR குறியீடு தொடர்பான பிரச்சினைகள் குறித்து அரசாங்க தகவல் திணைக்கள பணிப்பாளர் நாயகத்தால் அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. அது கீழே 




2026.03.15 QR குறியீடுகளைப் பயன்படுத்தி எரிபொருள் விநியோகம் 


 முன்னர் QR குறியீட்டைப் பெற்று, அதே வாகனத்தையும் அதே தொலைபேசி எண்ணையும் இப்போதும் பயன்படுத்தும் நபர்கள் எந்தப் பிரச்சினையும் இல்லாமல் புதிய QR குறியீட்டைப் புதுப்பித்துக் கொள்ளலாம்.

வாகனங்கள் அல்லது தொலைபேசி எண்களை மாற்றியவர்கள் மற்றும் புதிதாக வாகனங்களை வாங்கியவர்கள் எதிர்கொள்ளும் பிரச்சினைகள் அடையாளம் காணப்பட்டு, அவை விரைவில் தீர்க்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. அத்துடன், அத்தியாவசிய சேவைகள், விவசாய நடவடிக்கைகளுக்கு எரிபொருள் வழங்குதல் உள்ளிட்ட குறிப்பிட்ட பிரச்சினைகள் தொடர்பில் இன்று மாலை தீர்மானங்கள் எடுக்கப்பட்டு, இன்று (15) தினத்திற்குள்ளேயே அவற்றுக்கு தீர்வுகள் வழங்கப்படும்.

அரசாங்க தகவல் திணைக்கள பணிப்பாளர் நாயகம்

an-announcement-from-the-director-general-of-government-information-on-qr-code-issues

Post a Comment

Previous Post Next Post