வரலாற்று சிறப்புமிக்க புனித தந்ததாதுவை வணங்கி ஆசீர்வாதம் பெற்ற பின்னர், இன்று (15) காலை 6.55 மணிக்கு அமைந்த சுபவேளையில், கண்டி வரலாற்று சிறப்புமிக்க தலதா மாளிகை வளாகத்தில் உள்ள ஸ்ரீ மகா நாத தேவாலய மைதானத்தில், மகா விகாரவம்சிக சியாமோபாலி மகா நிகாயவின் மல்வத்து மற்றும் அஸ்கிரி இரு பிரிவுகளின் மகாநாயக்க தேரர்களின் வழிகாட்டுதலின் கீழ், சம்பிரதாயபூர்வமாக நடைபெற்ற '2026 ஆம் ஆண்டுக்கான எண்ணெய் பூசும் அரச விழா'வில், ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க கலந்துகொண்டார்.