இலஞ்சம் அல்லது ஊழல் குற்றச்சாட்டுகளை விசாரிக்கும் ஆணைக்குழுவினால் இலங்கை ரூபவாஹினி கூட்டுத்தாபனத்தின் (2018-19) முன்னாள் தலைவர் சரத் கோன்கஹகே மற்றும் அதன் முன்னாள் பணிப்பாளர் நாயகம் தேவப்பிரிய அபேசிங்க ஆகியோர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
குறித்த காலப்பகுதியில் ரூபவாஹினி கூட்டுத்தாபனத்திற்கு 14.32 மில்லியன் ரூபா பாரிய நிதி இழப்பை ஏற்படுத்தியமை தொடர்பில் அவர்கள் மீது சுமத்தப்பட்டுள்ள பாரிய குற்றச்சாட்டை அடிப்படையாகக் கொண்டே இந்த கைது மேற்கொள்ளப்பட்டுள்ளது.
அறிக்கைகளின்படி, குறித்த நிறுவனத்திற்குச் சொந்தமான அங்கீகரிக்கப்பட்ட ஊழியர் குழுவின் வரம்பை மீறி, வெளியிலிருந்து ஆறு ஊழியர்களை சட்டவிரோதமான முறையில் சேவைக்கு இணைத்துக்கொண்டதன் காரணமாகவே இந்த இழப்பு ஏற்பட்டுள்ளது.
அவ்வாறு ரூபவாஹினி கூட்டுத்தாபனத்தின் கீழ் இணைத்துக்கொள்ளப்பட்ட குறித்த ஆறு ஊழியர்கள், அதன் பின்னர் முன்னாள் அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்லவின் தனிப்பட்ட ஊழியர் குழுவின் பணிகளுக்காக நியமிக்கப்பட்டிருந்தமை விசாரணைகள் மூலம் மேலும் தெரியவந்துள்ளது.