லாஃப்ஸ் எரிவாயு நிறுவனம் தனது வீட்டு எரிவாயு சிலிண்டர்களின் விலைகளை நேற்று (06) நள்ளிரவு முதல் அமுலுக்கு வரும் வகையில் அதிகரிக்க தீர்மானித்துள்ளது.
இந்த புதிய விலை திருத்தத்தின்படி, 12.5 கிலோ எடையுள்ள பிரதான வீட்டு எரிவாயு சிலிண்டரின் விலை 545 ரூபாவால் அதிகரிக்கப்பட்டுள்ளது. அதன்படி, நுகர்வோர் அந்த எரிவாயு சிலிண்டரை வாங்குவதற்காக இனிமேல் 6,245 ரூபா செலுத்த நேரிடும்.
இது தவிர, 5 கிலோ கொள்ளளவு கொண்ட சிறிய லாஃப்ஸ் எரிவாயு சிலிண்டரின் விலையையும் 220 ரூபாவால் அதிகரிக்க சம்பந்தப்பட்ட நிறுவனம் நடவடிக்கை எடுத்துள்ளது. இந்த விலை அதிகரிப்புடன், அதன் புதிய விற்பனை விலை 2,500 ரூபாவாக சந்தையில் பதிவாகும்.