இராணுவ வீரரிடமிருந்து பெண் காவலருக்கு 'பிறப்புறுப்பின்' வாட்ஸ்அப் வீடியோக்கள் வருகின்றனவாம்

lingendera-videos-from-army-soldier-to-constable-on-whatsapp

கிளிநொச்சி பிரதேசத்தில் கடமையாற்றும் ஒரு பொலிஸ் கான்ஸ்டபிளுக்கு வட்ஸ்அப் (WhatsApp) ஊடாக பல சந்தர்ப்பங்களில் தனது நிர்வாணத்தைக் காண்பித்து பாலியல் தொல்லை கொடுத்ததாகக் கூறப்படும் ஒரு இராணுவ சிப்பாயை ஜெயபுரம் பொலிஸார் கடந்த 29ஆம் திகதி கைது செய்துள்ளனர்.




இவ்வாறு கைது செய்யப்பட்டவர் கிளிநொச்சியில் அமைந்துள்ள ஒரு இராணுவ முகாமில் கடமையாற்றும், அனுராதபுரம், எலயபத்து பிரதேசத்தில் நிரந்தர வதிவிடத்தைக் கொண்ட நாற்பத்தொரு வயதுடைய ஒரு திருமணமான நபராவார். சம்பந்தப்பட்ட கான்ஸ்டபிள் கடந்த ஆண்டு ஜூலை மாதம் செய்த முறைப்பாட்டின் படி மேற்கொள்ளப்பட்ட நீண்ட பொலிஸ் விசாரணையின் விளைவாக இந்த கைது நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. அந்த முறைப்பாட்டில் குறிப்பிடப்பட்டுள்ளபடி, வட்ஸ்அப் ஊடாக அவளுக்கு அவ்வப்போது அழைப்புகள் விடுத்த சிப்பாய், தன்னை மீண்டும் அழைக்க வேண்டாம் என்று கூறியிருந்தும் தொந்தரவு செய்யும் வகையில் செய்திகளை அனுப்பியுள்ளதுடன், தன்னுடன் படுக்கையைப் பகிர்ந்து கொள்ளுமாறு குறுஞ்செய்திகளை அனுப்பிய அதேவேளையில், பல்வேறு கோணங்களில் தனது பிறப்புறுப்பைக் காட்டி அசைக்கும் வீடியோ துண்டுகளை அனுப்பி அவளை கடுமையான மன உளைச்சலுக்கு ஆளாக்கியுள்ளார். 



அந்த வீடியோக்களில் சிப்பாய் அவளை பாலியல் செயலுக்குத் தூண்டுவதற்கு கடுமையான அழுத்தம் கொடுத்து ஆபாசமான விடயங்களைப் பேசியுள்ளதாகவும் முறைப்பாட்டில் குறிப்பிடப்பட்டுள்ளது. சிப்பாயின் தொல்லைகள் குறித்து கான்ஸ்டபிள் தான் கடமையாற்றும் பொலிஸில் முறைப்பாடு செய்திருந்தாலும், அது குறித்து ஆர்வம் குறைவாகவே இருந்துள்ளதுடன், சிப்பாய் 10 மாதங்களுக்குப் பின்னரே கைது செய்யப்பட்டுள்ளார்.

ஒரு பெண்ணுக்கு தனது நிர்வாணத்தைக் காண்பித்து பாலியல் துன்புறுத்தல் செய்த குற்றச்சாட்டின் பேரில் இந்த சந்தேகநபரான இராணுவ சிப்பாய் தொடர்பாக ஜெயபுரம் பொலிஸார் தற்போது மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர். அந்த விசாரணை நடவடிக்கைகளுக்குப் பின்னர் சந்தேகநபர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்படவுள்ளார் என பொலிஸ் வட்டாரங்கள் மேலும் தெரிவிக்கின்றன.

Post a Comment

Previous Post Next Post