இலங்கையின் முன்னணி பிராண்டுகளான பிரைம் குழுமம் மற்றும் மெல்வா ஆகிய இரண்டும் இணைந்து போர்ட் சிட்டி கொழும்பின் 'மரீனா' (Marina) பகுதியில் ஒரு ஆடம்பர அடுக்குமாடி குடியிருப்பு திட்டத்தை உத்தியோகபூர்வமாக ஆரம்பித்துள்ளன.
கொழும்பு துறைமுக நகரில் அமைந்துள்ள மிக விசேடமான பகுதியான, படகுகள் நிறுத்தும் வசதியுள்ள, இந்தியப் பெருங்கடலின் மிக அழகான காட்சியை வழங்கும் 'மரீனா' முன் உள்ள மிக உயர்ந்த மதிப்புள்ள இந்த நிலப்பகுதியை பிரைம் மற்றும் மெல்வா நிறுவனங்கள் இணைந்து தேர்ந்தெடுப்பதற்கு பல விசேட காரணங்கள் உள்ளன.
எதிர்காலத்தில் இந்த நிலத்தின் மதிப்பு உயரும் போக்கு திட்டத்திற்கு அதிக மதிப்பைச் சேர்ப்பது, வெளிநாட்டு முதலீட்டாளர்களை ஈர்க்கும் திறன் மற்றும் உலகில் கட்டப்பட்ட மரீனா (Marina) திட்டங்களுக்கு அதிக தேவை மற்றும் அதிக மதிப்புடன் இருப்பது போன்ற காரணங்கள் அந்தக் காரணங்களில் விசேடமானவை.
மேலும், இந்த நிலம் போர்ட் சிட்டி கொழும்பின் மரீனா (Marina) பகுதியில் 'மரீனா' (Marina) விற்கு நேராக எதிர்கொள்ளும் கடைசி நிலப்பகுதியாகும். இங்கு ஒரு ஆடம்பர அடுக்குமாடி குடியிருப்பு திட்டத்தை பிரைம் குழுமத்தின் தாய் நிறுவனமான பிரைம் லேண்ட்ஸ் (பிரைவேட்) லிமிடெட் கீழ் நிறுவப்பட்ட பிரைம் மெல்வா போர்ட் சிட்டி (பிரைவேட்) லிமிடெட் மேற்கொள்கிறது.
தற்போது இந்த திட்டத்திற்கு உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு முதலீட்டாளர்களிடமிருந்து பெரும் தேவை ஏற்பட்டுள்ளது. இந்த திட்டம், இலங்கையை தெற்காசியாவின் மிக விசேடமான வணிக மற்றும் வாழ்க்கை முறை மையமாக மாற்றுவதற்கான ஒரு முக்கியமான படியாக கருதப்படுகிறது.