14 வயது சிறுமியை பாலியல் துஷ்பிரயோகம் செய்த 21 வயது மௌலவி கைது

the-21-year-old-maulavi-who-seriously-abused-a-14-year-old-girl-was-arrested

எரகம பிரதேசத்தைச் சேர்ந்த 21 வயது மௌலவி ஒருவர், 14 வயது சிறுமியை பாலியல் துஷ்பிரயோகம் செய்த குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். இந்த குற்றத்தின் பிரதான சந்தேகநபரான மௌலவி, சம்பவத்திற்குப் பிறகு பிரதேசத்தில் இருந்து தப்பிச் சென்றதாக பொலிஸார் குறிப்பிட்டனர்.

எவ்வாறாயினும், பின்னர் அவர் மே மாதம் 20 ஆம் திகதி ஒரு சட்டத்தரணி ஊடாக அம்பாறை நீதவான் நீதிமன்றத்தில் சரணடைந்தார்.




அதன்படி, சந்தேகநபரான மௌலவியை 2026 ஜூன் மாதம் 03 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்க நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இந்த சம்பவத்திற்கு பிரதான சந்தேகநபருக்கு உதவியதாக கூறப்படும் எரகம பிரதேசத்தைச் சேர்ந்த மேலும் ஒரு 21 வயது இளைஞன் முதலில் கைது செய்யப்பட்டார். அவர் கடந்த மே மாதம் 09 ஆம் திகதி அம்பாறை நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட பின்னர் விளக்கமறியலில் வைக்கப்பட்டார்.

அந்த இரண்டாவது சந்தேகநபரை முதலில் மே 20 ஆம் திகதி வரையிலும், பின்னர் ஜூன் மாதம் 03 ஆம் திகதி வரையிலும் மேலும் விளக்கமறியலில் வைக்க நீதவான் உத்தரவிட்டார். இந்த துஷ்பிரயோக சம்பவம் தொடர்பாக எரகம பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

Post a Comment

Previous Post Next Post