
2025 ஆம் ஆண்டுக்கான கல்விப் பொதுத் தராதரப்பத்திர சாதாரண தரப் பரீட்சைப் பெறுபேறுகளை இலங்கை பரீட்சைத் திணைக்களம் தற்போது இணையத்தில் வெளியிட்டுள்ளது. அதன்படி, பரீட்சைக்குத் தோற்றிய அனைத்துப் பரீட்சார்த்திகளும் பரீட்சைத் திணைக்களத்தின் உத்தியோகபூர்வ இணையத்தளங்களான www.doenets.lk அல்லது results.exams.gov.lk க்குச் சென்று தமது பெறுபேறுகளை மிக இலகுவாகப் பரிசோதித்துப் பார்க்க வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது.
இந்த ஆண்டு பெப்ரவரி மாதம் 17 ஆம் திகதி முதல் பெப்ரவரி மாதம் 26 ஆம் திகதி வரை நாடு முழுவதும் உள்ள 3,547 பரீட்சை நிலையங்களில் இந்தப் பரீட்சை நடத்தப்பட்டுள்ளது. இலங்கை பரீட்சைத் திணைக்களத்தின் உத்தியோகபூர்வ அறிக்கைகளின்படி, இம்முறை சாதாரண தரப் பரீட்சைக்கு மொத்தம் 451,463 பரீட்சார்த்திகள் தோற்றியுள்ளனர்.
வெளியிடப்பட்டுள்ள பரீட்சைப் பெறுபேறுகள் தொடர்பில் மீள் பரிசீலனை செய்ய விரும்பும் மாணவர்களுக்கான விண்ணப்ப காலமும் ஒதுக்கப்பட்டுள்ளது. அதன்படி, எதிர்வரும் ஜூன் மாதம் 25 ஆம் திகதி முதல் ஜூலை மாதம் 07 ஆம் திகதி வரை இணையவழி (Online) மூலம் மட்டுமே மீள் பரிசீலனை விண்ணப்பங்களைச் சமர்ப்பிப்பதற்கான வசதிகள் செய்யப்பட்டுள்ளன.