கொழும்பு துறைமுக நகரத்தை கலக்கிய "Prime Marina" திட்டம்

the-prime-marina-project-launched-in-the-port-city-of-colombo

இலங்கை ரியல் எஸ்டேட் வரலாற்றை புரட்டிப் போட்டு, முழு கொழும்பு நகரத்தையும் வியப்பில் ஆழ்த்திய ஒரு புரட்சிகரமான இரவு அண்மையில் முடிவடைந்தது.




அது, Prime Group மற்றும் மெல்வா நிறுவனம் இணைந்து இலங்கையில் அறிமுகப்படுத்தும் அதி சொகுசு வீட்டுத் திட்டமான "Prime Marina" இன் வெளியீட்டுடன் ஆகும்.

இலங்கையின் புதிய நிதி மற்றும் வணிக மையமான போர்ட் சிட்டி, கொழும்பில், அழகிய கடல் கரைக்கும், படகுத் துறைக்கும் நேராக அமைந்துள்ள இடத்தில் இந்த விசேட நிகழ்வு நடைபெற்றது.




அன்றிரவு முழு கொழும்பு வானமும் இலங்கை வரலாற்றில் முதல்முறையாக நடத்தப்பட்ட பிரமாண்டமான 3D அனிமேஷன் ட்ரோன் காட்சியால் ஒளிரப்பட்டது.

கொழும்பு நகரத்திற்கே மிகத் தெளிவாகத் தெரியும் வகையில் நூற்றுக்கணக்கான ட்ரோன்கள் வானத்தில் பல்வேறு வடிவங்களை உருவாக்கியபோது, அதற்கு இணையாக தாமரைக் கோபுரம் "Prime Marina" இன் வர்த்தக நாம வண்ணங்களால் அலங்கரிக்கப்பட்டிருந்தது.



மேலும், மனதைக் கவரும் வாணவேடிக்கை காட்சியாலும் போர்ட் சிட்டி, கொழும்பு ஒளிரப்பட்டது.

இந்த விசேட நிகழ்வில் உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு முன்னணி வர்த்தகர்கள், முதலீட்டாளர்கள் மற்றும் 1,500க்கும் மேற்பட்ட விசேட விருந்தினர்கள் கலந்துகொண்டனர்.

இலங்கை ரியல் எஸ்டேட் துறையில் புதிய விற்பனை சாதனையை நிலைநாட்டி, "Prime Marina" திட்டத்தின் 400க்கும் மேற்பட்ட வீட்டு அலகுகள் ஏற்கனவே விற்பனையாகிவிட்டன.

உலகத் தரத்திலான மிக உயர்ந்த தரத்தில் கட்டப்படும் "Prime Marina" இல் முதலீடு செய்வது, உள்நாட்டு மற்றும் சர்வதேச முதலீட்டாளர்களுக்கு சிறந்த எதிர்காலத்திற்கான முதலீடாக இருக்கும் என்பதில் சந்தேகமில்லை.

the-prime-marina-project-launched-in-the-port-city-of-colombo

the-prime-marina-project-launched-in-the-port-city-of-colombo

the-prime-marina-project-launched-in-the-port-city-of-colombo

the-prime-marina-project-launched-in-the-port-city-of-colombo

Post a Comment

Previous Post Next Post